போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் செய்த மாஸ் சம்பவம்.. காணாமல் போன பாக் கேப்டன் – களத்தில் என்ன நடந்தது?

0
36
ICT

இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆசிய கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதும் இந்திய அணி வீரர்கள் செய்த ஒரு காரியம் பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது.

2025 ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தியாவில் அதிகரித்த எதிர்ப்பு

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக் கூடாது என இந்தியாவில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இது எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இந்திய அரசாங்கம் அனுமதி கொடுத்த காரணத்தினால் தான் பிசிசிஐ சம்மதித்தது என இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த பிரச்சினையில் இருந்து நழுவிக் கொண்டது. மேலும் இந்திய முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக் கூடாது என்று கூறியிருந்தார்கள்.

- Advertisement -

இந்திய வீரர்கள் செய்த காரியம்

இந்த நிலையில் இன்று போட்டி முடிந்ததும், களத்தில் விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே இருவரும் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்காமல் நேராக ஓய்வறைக்கு சென்று விட்டார்கள். மேலும் மற்ற இந்திய வீரர்களும் கைகுலுக்க வெளியே வரவில்லை.

இதையும் படிங்க : பாகிஸ்தானுடன் வெற்றிக்கு பின்னால் இருப்பது.. ரோகித்தின் ஒரு விஷயம்தான்.. இது ரிட்டர்ன் கிப்ட் – சூரியகுமார் யாதவ் பேட்டி

இந்த நிலையில் போட்டி முடிந்ததும் பேட்டி அளிப்பதற்காக இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் ஆட்டநாயகன் விருது வென்ற குல்தீப் யாதவ் இருவர் மட்டுமே வந்தார்கள். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் தோல்வி குறித்து காரணங்கள் கூறுவதற்கு வரவில்லை. இது தற்போது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -