இன்று ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு அணிகளும் ஓதிக் கொள்ளும் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இந்திய அணி வெற்றி
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பர்கான் அதிகபட்சமாக 44 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் கைப்பற்றினார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அதிரடியாக அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 31 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி மூன்று விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வெற்றிக்கு காரணம்
இந்த போட்டி குறித்து பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ் ” இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு விஷயம் குறித்து யோசித்துக் கொண்டே இருக்கும் பொழுது அது நடந்தால் மகிழ்ச்சி அடைவது மனித இயல்பு. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது எப்பொழுதும் சிந்தனையில் இருந்தது. வென்ற பிறகு பெட்டியை டிக் அடித்த உணர்வு கிடைக்கிறது. எப்பொழுதும் இறுதிவரை களத்தில் நின்று ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று விரும்புவேன் அது இன்று நடந்தது”
இதையும் படிங்க : கம்பீரின் பிரில்லியன்ட் பிளான்.. பாகிஸ்தான் அணியை வாரிசுருட்டிய இந்திய ஸ்பின்னர்கள்.. துபாயில் அபாரம்
“எங்கள் அணியை பார்த்தால் எங்களுக்கு இது இன்னொரு போட்டிதான். எல்லா எதிரணிகளுக்கு எதிராகவும் ஒரே மாதிரிதான் தயாராகிறோம். சில மாதங்களுக்கு முன்பு இங்கு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிதான் எங்களுக்கான துணை செட் செய்தது. நான் எப்போதும் ஸ்பின்னர்களின் ரசிகன். அவர்கள் தான் நடுவில் ஆட்டத்தை கட்டுப்படுத்த கூடியவர்கள்” என்று கூறியிருக்கிறார்.






