வெறும் 4.3 ஓவர்.. பை பை சொன்ன இந்தியா.. டி20 வரலாற்றில் சாதனை வெற்றி.. யுஏஇ சொந்த மண்ணில் சோக தோல்வி

0
572
Surya

இன்று ஆசியக் கோப்பை டி20 தொடரில் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெறும் 4.3 ஓவரில் இலக்கை எட்டி பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.

நேற்று துவங்கிய ஆசியக் கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் யுஏஇ அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

குல்தீப் யாதவ் அபாரம்

முதலில் பேட்டிங் செய்ய வந்த யுஏஇ அணிக்கு அலிசான் சர்பு சிறப்பான துவக்கம் கொடுத்து 17 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் முகமத் வாசிம் 22 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து யுஏஇ அணியில் எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. யுஏஇ அணி 13 ஓவரில் 57 ரன் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஸ்பின்னர் குல்தீப் யாதவ் மொத்தம் 13 பந்துகள் மட்டும் வீசி ஏழு ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து சிவம் துபே சிறப்பாக பந்து வீசி 4 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

அசால்டாய் முடித்த இந்தியா

இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு முதல் பந்தலேயே சிக்சர் அடித்து ஆரம்பித்த அபிஷேக் ஷர்மா 16 பந்தில் 30 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் 9 பந்தில் 20 ரன் எடுத்தார். இந்திய அணி வெறும் 4.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணிக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சேஸ் இதுவாக அமைந்தது

இதையும் படிங்க: களத்தில் சூரியகுமார் செய்த நெகிழ்ச்சியான காரியம்.. ஆனாலும் பரிதாபமான யுஏஇ.. இந்தியா அபாரம்

டி201ல் இந்தியாவின் அதிவேக சேஸ்:
4.3 ஓவர்கள் எதிராக யுஏஇ 2025 (இலக்கு 58)*
6.3 ஓவர்கள் எதிராக ஸ்காட்லாந்து 2021 (இலக்கு 86)
9.2 ஓவர்கள் எதிராக பங்களாதேஷ் 2023 (இலக்கு 97)
10.1 ஓவர்கள் எதிராக யுஏஇ 2016 (இலக்கு 82)
11.5 ஓவர்கள் எதிராக பங்களாதேஷ் 2024 (இலக்கு 128)

- Advertisement -