அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு நிறைய இளம் வீரர்களை உள்ளடக்கிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த வருடம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக அனைத்து அணிகளும் அதிகமாக டி20 கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த வகையில் இங்கிலாந்து தொடர்ந்து டி20 தொடர்களில் விளையாடிக் கொண்டு இருக்கிறது.
ஜோஸ் பட்லர் உதவி
தற்போது இங்கிலாந்து அணியில் இருக்கும் சில முக்கியமான வீரர்களுக்கு அயர்லாந்து டி20 தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு பக்கபலமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் இவர்களுடன் பில் சால்ட், ஆதில் ரஷீத், வில் ஜேக்ஸ் போன்ற அனுபவ வீரர்களும் இடம் பெற்று இருக்கிறார்கள். அதே சமயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்ற வீரர்கள் அனைவரும் இளம் வீரர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பைக்கு சில இடங்களுக்கு வீரர்களை தேர்ந்தெடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருக்கிறது.
ஆர்சிபி பையன் கேப்டன்
தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அணிக்கு ஆர்சிபி அணிக்காக விளையாடும் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். இவர் இங்கிலாந்து கிரிக்கெட்டில் எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படுகிறார். மேலும் இங்கிலாந்து அண்டர் 19 அணிக்கு கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நான் தோனியை பார்த்து கற்றுக் கொண்டேன்.. பொறுப்பு கிடைச்சதுமே அந்த முடிவை எடுத்தேன் – பாகிஸ்தான் கேப்டன் பேச்சு
இங்கிலாந்து அணி :ஜேக்கப் பெத்தேல் (கேப்டன்), ரெஹான் அகமது, சோனி பேக்கர், டாம் பான்டன், ஜோஸ் பட்லர், லியாம் டாசன், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், பில் சால்ட், லூக் வுட் மற்றும் ஜோர்டான் காக்ஸ்.






