இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவனத்தையும் தென் ஆப்பிரிக்க வீரரான டெவால்ட் பிரவீஸ் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் பிரவீஸ் தற்போது எம் எஸ் தோனி குறித்து சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்தில் பல போட்டிகளில் தோல்வியை தழுவி மோசமான நிலையில் இருந்தது. தரமான வீரர்கள் இல்லாததால் வெற்றி பெறவே தடுமாறிய சென்னை அணிக்கு தொடரின் பாதியில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டெவால்டு பிரவீஸ் சேர்க்கப்பட்டார். அவர் களமிறங்கி விளையாடிய ஆட்டம் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவினாலும் அவரது அதிரடி ஆட்டம் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தது.
அவரது வருகைக்குப் பிறகு சென்னை அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தாலும், அடுத்த வருடத்திற்கான நிரந்தர வீரர் பட்டியலில் பிரவீஸ் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது ஆட்டத்தை பார்த்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இவரை சர்வதேச கிரிக்கெட்டிலும் சேர்த்தது.
இதன் விளைவாக தென்னாப்பிரிக்க அணியில் இணைந்த பிரவீஸ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் எம் எஸ் தோனி குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார். எம் எஸ் டோனியை எளிதாக எந்நேரமும் அணுக முடியும் எனவும் அவரோடு நேரத்தை செலவிட்டது சிறந்த தருணம் எனவும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க:இவர்கள் செஞ்ச வேலைக்கு.. நடுவர் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி இருக்கணும் – இங்கிலாந்து முன்னாள் வீரர்
அவர் விரிவாக கூறும்போது “அவரது பணிவு எம் எஸ் தோனி ஒரு நபராக இருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வீரர்கள் மக்கள் என யார் வேண்டுமானாலும் அவரை எந்த நேரத்திலும் அணுக முடியும். எப்போதும் அவரது அறையின் கதவு திறந்தே இருக்கும். அவரது அறையின் கதவு மூடப்பட்டிருந்தால் அது அவரது தூங்கும் நேரம் மட்டும் ஆக இருக்கும். அவரோடு பொழுதுபோக்குகளைப் பற்றி பேசுவது கிரிக்கெட் பார்ப்பது என அனைத்தும் சிறப்பாக இருக்கும்” என்று பேசி இருக்கிறார்.






