177 ரன்.. 71 இன்னிங்சாக தொடரும் பாபரின் சோகம்.. வெஸ்ட் இண்டீஸ் ரிவெஞ்ச்.. பாகிஸ்தான் அணி தோல்வி

0
276
Babar

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக செயல்பட்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.

- Advertisement -

பாபர் அசாமின் சோகம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சையும் அயூப் 23, அப்துல்லா ஷபிக் 26 ரன்கள் எடுத்தார்கள். தொடர்ந்து வந்த பாபர் அசாம் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். கடந்த இரண்டு வருடமாக 71 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்காத சோகம் பாபர் அசாமை தொடர்கிறது.

இதற்கு அடுத்து மிடில் வரிசையில் தலாட் 32 பந்தில் 31 ரன், ஹசன் நவாஸ் ஆட்டம் இழக்காமல் 30 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்கள். இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 37 ஓவர்களில் 184 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் பிரண்டன் கிங் 1, எவின் லீவிஸ் 7, கீசி கார்தி 16 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற நெருக்கடி ஏற்பட்டது.

இதையும் படிங்க : விராட் ரோஹித் கிரிக்கெட் எதிர்காலத்தை விட.. இந்திய அணிக்கு இப்போ இந்த விஷயம்தான் முக்கியம்.. பிசிசிஐ வெளியிட்ட தகவல்

இதற்கடுத்து ஷாய் ஹோப் 35 பந்தில் 32 ரன், ரூதர்போர்ட் 33 பந்தில் 45 ரன், ரோஸ்டன் சேஸ் 47 பந்தில் 49* ரன், ஜஸ்டின் கிரீவ்ஸ் 31 பந்தில் 26* ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை ஏற்றி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 1-1 என சமன் செய்திருக்கிறது. கடைசி போட்டி இறுதி போட்டியாக மாறி இருக்கிறது.

- Advertisement -