2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்ப்பு முன்பாகவே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெறக்கூடும் என செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் ஒரு விஷயம் நடந்தால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து விளையாடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அணி இறுதியாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 2011ம் ஆண்டு சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்றது. அதற்குப் பிறகு 14 ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்து வருகிறது. இந்த வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவுகளை எடுக்க நினைப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் மூன்று போட்டியில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அந்த அணிக்கு எதிராக தொடங்குகிறது. இந்த தொடரில் முடிவிலேயே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தங்களது ஓய்வு அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதற்குப் பின்னணியில் இந்திய தேர்வுக்குழு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. காரணம் இந்திய வெள்ளை பந்து அணிகளுக்கு ஏகப்பட்ட இளம் திறமையான வீரர்கள் வெளியில் இருக்கிறார்கள். மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களுக்கு முன்பாக அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து காம்பினேஷனை கண்டறிய வேண்டிய தேவை இருக்கிறது. இதனால் சீக்கிரத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை ஓய்வு முடிவை நோக்கி இந்திய கிரிக்கெட் வாரியம் தள்ளும் என்று சொல்லப்படுகிறது.
இது நடந்தால் ஓய்வதில்லை
அதேசமயத்தில் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மிகப்பெரிய உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. தேசிய அணிக்கு விளையாடாத வீரர்கள் அனைவருமே உள்நாட்டு தொடர்களில் விளையாட வேண்டும் என்கின்ற விதி கொண்டுவரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிஎஸ்கே அணிக்கு செம பிராண்ட்.. எம்எஸ் தோனிக்கு சரியான மாற்றுவீரர் இவர்தான்.. முன்னாள் தேர்வு குழு தலைவர்
இந்த அடிப்படையில் இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கி விளையாடுவார்கள் என்றால், இவர்கள் இருவருமே 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய தேர்வுக் குழு இருவரையும் சீக்கிரத்தில் ஓய்வு பெற வைக்க விரும்புவதாகவே கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.






