இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்த வீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து இன்று களம் இறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான பேட்டிங்கில் ஈடுபட்டு வேகமாக ரன் குவிக்க ஆரம்பித்தது.
ஆச்சரியப்படுத்திய இங்கிலாந்து
இந்த போட்டி நடக்கும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கெட் அதிரடியாக 38 பந்தில் 43 ரன்கள், ஜாக் கிரவுலி 57 பந்தில் 64 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணிக்கு அதிரடியான அற்புத துவக்கத்தை கொடுத்தார்கள்.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி 129 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து வலிமையான நிலையில் இருந்தது. எனவே இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கூடுதல் ரன் முன்னிலை பெற்று இந்திய அணியை மிக எளிதாக தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முகமது சிராஜ் அசத்தல்
இதைத்தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி திரும்பி வர முகமது சிராஜ் தனது பந்துவீச்சில் ஒல்லிப் போப் 22, ஜோ ரூட் 29, ஜேக்கப் பெத்தேல் 6 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற்றி இந்திய அணிக்கு நம்பிக்கையை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து பிரசித் கிருஷ்ணா ஜேமி ஸ்மித் 8, ஜேமி ஓவர்டன் 0 என அடுத்தடுத்து வெளியேற்றி இங்கிலாந்து அணியை 215 ரன்னுக்கு ஏழு விக்கெட் என தள்ளி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : கில் செய்த காரியம்.. வெறுத்துப்போன சிராஜ்.. இங்கிலாந்தின் மாஸ்டர் பிளான்.. களத்தில் என்ன நடந்தது?
தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சிராஜ் தந்த திருப்பதால் திரும்பி வந்திருக்கிறது. மேலும் பும்ரா இல்லாத போதெல்லாம் முகமது சிராஜ் பந்துவீச்சில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லாத பொழுது ஐந்து விக்கெட் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதும் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார்.






