இங்கிலாந்து அணி வீரர் ஹாரி புரூக் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் யார்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிற காரணத்தினால் இந்திய அணிக்கு அழுத்தம் உருவாகி இருக்கிறது.
இந்திய அணியில் இவர் அற்புதமான வீரர்
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர இளம் பேட்ஸ்மேன் ஹாரி புரூக் இந்திய அணி குறித்தும், நாளைய போட்டி நடைபெறும் மைதானத்தின் ஆடுகளம் குறித்தும், ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனது குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
“ரிஷப் பண்ட் ஒரு அற்புதமான வீரர். அவர் பேட்டிங் செய்வதை பார்த்து நான் ரசித்தேன். அவர் பேட்டிங் செய்வதை பார்க்க கண்கள் கவரும். அவர் பேட்டிங் செய்யும்பொழுது எல்லோரும் டிவியை ஆன் செய்வார்கள். என்னுடைய கருத்துப்படி உலகில் சிறந்த பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர்”
ஐபிஎல் தொடரில் விளையாடாதது
“ஐபிஎல் தொடரில் விலகியது மிகவும் கடினமான ஒரு முடிவு. ஐபிஎல் உலகின் சிறந்த வீரர்கள் பங்கு பெற்று விளையாடும் அற்புதமான தொடர். அங்கு சூழ்நிலையும் மைதானத்திற்கு வரும் கூட்டமும் சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தில் ஐபிஎல் விளையாடுவதற்கு விரும்புகிறேன். ஆனால் தற்போதைக்கு இங்கிலாந்து அணிக்கான கடமைகளில் இருப்பேன்”
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் கேட்ச் மிஸ்.. கம்பீர் கொடுத்த தண்டனை.. தமிழக வீரருக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்கள்
“இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் மைதானத்தின் ஆடுகளம் வரலாற்று ரீதியாக பேட்டிங் செய்ய சாதகமானது. சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஏதாவது கொஞ்சம் சாதகம் கிடைக்கலாம். மற்றபடி பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் ஆடுகளம் மெதுவாக மாறிவிடும்” என்று கூறி இருக்கிறார்.






