நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 180 ரன் மற்றும் எடுத்து சுருண்டது. இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் கடைசி சில ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து போராடி வருகிறது.
தற்போது ஆஸ்திரேலியா மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதன் தொடக்கத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. நேற்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
கலக்கிய ஷாமர் ஜோசப்
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இளம் தொடக்க ஆட்டக்கார சாம் கான்ஸ்டாஸ் 3, கேமரூன் கிரீன் 3, ஜோஸ் இங்லீஷ் 5, வெப்ஸ்டர் 11, அலெக்ஸ் கேரி 11, ஸ்டார்க் 0, கம்மின்ஸ் 28 என சொற்ப வெளியேற ஆஸ்திரேலியா அணி பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது.
இந்த நிலையில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக 78 பந்தில் 59 ரன், தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 128 பந்தில் 47 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா அணி 56.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் எடுத்தது. ஜெய்டன் ஷீல்ஸ் 5, ஷாமர் ஜோசப் தொடக்கத்தில் முக்கிய நான்கு ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போராடும் வெஸ்ட் இண்டீஸ்
இதைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஓரளவுக்கு சுமாராக ஆரம்பித்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிவதற்கு இரண்டு ஓவர்கள் இருந்த பொழுது மேற்கொண்டு இரண்டு விக்கெட்டுகளை இழந்து 57 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. ஸ்டார்க் 2, கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : இந்திய அணிக்காக இந்த ஒரு விஷயத்தை.. செய்ய சொல்லி பும்ராவிடம் கேட்பேன்.. வேறு வழி இல்லை – ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி
ஆஸ்திரேலியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் கான்ஸ்டாஸ் தன்னுடைய பந்துவீச்சின் சிறப்பாக விளையாட முடியாது என ஷாமர் ஜோசப் கூறியிருந்தார். இதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் ஹீலி நீங்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய பவுலர் அம்ப்ரோஸ் கிடையாது என பதிலடி கொடுத்திருந்தார். ஆனால் நேற்று போட்டி துவங்கியதுமே ஷாமர் ஜோசப் கான்ஸ்டாஸ் விக்கெட்டை கைப்பற்றி மீண்டும் பதிலடி கொடுத்தார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்த சுவாரசியமான சம்பவம் சென்று கொண்டிருக்கிறது.






