இந்திய பேட்டிங் யூனிட் குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் அதை டாபர்மேன் நாயுடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார். நேற்று இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வி அடைந்ததற்கு பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார்.
மேலும் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 5 சதங்கள் அடித்தது. ஆனாலும் தோல்வி அடைந்திருக்கிறது. ஒரு போட்டியில் ஐந்து சதங்கள் அடித்து தோற்ற முதல அடி என 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்திருக்கிறது.
இந்தியாவின் பலவீனம் இங்கிலாந்தின் பலம்
இந்திய அணியை பொறுத்தவரையில் பீல்டிங் மிக மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் கீழ் வரிசை பேட்டிங் அதைவிட மோசமாக இருந்தது. இதன் காரணமாகவே இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணி நினைத்த ஸ்கோருக்கு செல்ல முடியவில்லை. இறுதியாக ஒரு 50 ரன்தான் இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது.
நான்கு விக்கெட்டுகளுக்கு பிறகு இந்திய அணி விக்கட்டுகளை இழக்கும் வேகம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் 31 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகள் இழக்கப்பட்டது. இந்திய அணியின் தோல்விக்கு இது மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இல்லையென்றால் இந்த போட்டி டிராவில் 100% முடிவடைந்திருக்கும்.
இந்திய பேட்டிங் யூனிட் டாபர்மேன்
இந்த நிலையில் இந்திய பேட்டிங் யூனிட் பற்றி பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” இந்திய பேட்டிங் யூனிட் டாபர்மேன் நாய் போன்றது என்று யாரோ கூறியிருந்ததை நான் ட்விட்டரில் பார்த்தேன். தலை நன்றாக இருக்கிறது, உடலின் நடுப்பகுதியும் நன்றாக இருக்கிறது, ஆனால் வால்தான் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். உண்மையில் இந்திய பேட்டிங் யூனிட் இப்படித்தான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : வரலாற்று தோல்விதான்.. ஆனா இந்த ஒரு விஷயத்துக்கு நான் பெருமைப்படறேன்.. பசங்க பண்ணுவாங்க – கில் பேட்டி
அதாவது டாபர்மேன் நாய்க்கு வால் இருக்காது. அதுபோல இந்திய பேட்டிங் யூனிட்டில் டைல் என்ட்டர்கள் அதாவது இறுதிக் கட்டத்தில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் இல்லை என்பதை டாபர்மேன் நாய்க்கு வால் இல்லை என்பதை வைத்து சுட்டிக் காட்டி இருக்கிறார்.






