இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் சதம் அடித்தது குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
இரு அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்ற வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கி விளையாடிய இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் அபாரமான சதத்தால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் சதம் அடித்தது மட்டுமல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்து வரலாறு படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் பேட்டிங் மனநிலை குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ரிஷப் பண்ட் மனநிலை
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ரிஷப் பண்ட் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் உடன் ஒப்பிடுவது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து பேசும்போது நீங்கள் பல ஆண்டுகளாக கவனத்தில் வைத்திருக்க வேண்டிய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பும்ராவை போலவே புதிய வீரர்களை பார்க்கும்போது ரிஷப் பண்ட் மிக வேகமாக முன்னேறி வருகிறார். அவர் பேட்டிங் செய்யும்போது மனப்பக்கத்தை எங்களால் கேட்க முடிந்தது.
இதையும் படிங்க:370 ரன்.. 93 வருட வரலாற்று சாதனை.. ஆனால் இந்திய அணிக்கு சோகம்.. போட்டியை வெல்ல வாய்ப்புகள் என்ன?
ஸ்டம்ப் மைக் அவருக்கு அருகில் இருப்பது நன்றியான விஷயமாக உள்ளது. இதன் மூலமாக எல்லா வகையான உரையாடல்களையும் கேட்க முடியும். நேற்று காலை விளையாடும் போது சற்று குழப்பத்தில் இருப்பதைப் போல தெரிந்தது. பின்னர் அவர் தனக்குள் தானே பேசிக் கொள்வதையும் கேட்க முடிந்தது. ‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் அமைதியாக இரு’ என்று அவர் பேசியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக தெரிந்தது. அதன் பிறகு அவர் தெளிவான மனநிலைக்கு வந்தவுடன் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மாற்றத்தை அவர் தனது பேட்டிங்கில் கொண்டு வந்தார். அவரது பேட்டிங் நெறிமுறை மீது எந்த அளவிற்கு கட்டுப்பாடு அவரிடம் உள்ளது என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என அவர் பேசியிருக்கிறார்.






