இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், துணை கேப்டன்மான ரிஷப் பண்ட், 146 பந்துகளில் சதம் அடித்தார். லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது.
ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்த நிலையில் 221 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி இணைந்த போது களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் கில்லுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இங்கிலாந்து பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்ட அவர் பவுண்டரி, சிக்சர் அடித்தார்.
அதிரடி காட்டிய பண்ட்
ஆனால் தொடர்ந்து அதிரடி காட்டாமல் கொஞ்சம் பொறுமை காத்து பண்ட் விளையாடியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனால் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் என்ற ஸ்கோருடன் தொடங்கியது.
அப்போது களத்தில் பண்ட் 65 ரன்கள் உடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தார். இன்றைய ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை அவர் அபாரமாக எதிர்கொண்டார். பண்ட், கில் ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர்.
தோனி சாதனை முறியடிப்பு:
ஒரு கட்டத்தில் 99 ரன்களில் இருந்த பண்ட், சிக்சர் அடித்து தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஏழாவது சதத்தை பண்ட் அடித்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிக சதம் அடித்த தோனியின் சாதனையை பண்ட் முறியடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: தண்ணி ஊத்தாம வளரும் முட்டாள்.. கோழி கூட கத்தும் உங்க பவுலர் மோசம் – வாகன் மீது சித்து விமர்சனம்
பண்ட் அடித்த ஏழு சதத்தில் நான்கு சதம் இங்கிலாந்துக்கு எதிராக அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மூன்று சதம் கடினமான ஆடுகளங்களை கொண்ட இங்கிலாந்தில் அடிக்கப்பட்டதாகும். இரண்டு சதம் இந்தியாவிலும், ஒரு சதம் தென்னாபிரிக்காவிலும் ஒரு சதம் ஆஸ்திரேலியாவிலும் பண்ட் அடித்திருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் சேனா நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக 5 சதங்களை பண்ட் அடித்துள்ளார்.






