IND vs ENG முதல் டெஸ்ட்.. வலிமையான இந்திய பிளேயிங் XI.. யாருக்கு எந்த இடம்?.. முழு அலசல்

0
378
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமைந்தால் சரியாக இருக்கும்? என்று பார்க்கலாம்.

இந்திய அணி கடந்த முறை இங்கிலாந்துக்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்த பொழுது லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்த மைதானத்தில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆடுகளம் எப்படி இருக்கும்?

இந்த முறை முதல் போட்டி நடைபெறும் ஆடுகளம் வழக்கமாக இங்கிலாந்து அணிக்கு தேவையான முறையில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்காது என்று ஆடுகள பராமரிப்பாளர் கூறியிருக்கிறார். மேலும் ஆடுகளத்தில் புல் இருக்கும் எனவும், வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும் எனவும் தெரிகிறது.

இதன் அடிப்படையில் இந்திய அணியில் மூன்று முக்கியமான வேகப்பந்துவீச்சாளர்களுடன் ஒரு வேத பந்துவீச்சு ஆல்ரவுண்டர் விளையாடுவார் என்பது தெரிகிறது. மேலும் ஸ்விங் கண்டிஷன் இருந்தால் அர்ஸ்தீப் சிங், இல்லையென்றால் பிரசித் கிருஷ்ணா மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக இருப்பார்கள். முதல் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் சிராஜ் இருப்பார்கள். சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறலாம்.

- Advertisement -

பேட்டிங் யூனிட் எப்படி அமையும்?

துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல்.ராகுல், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு அறிமுகவீரர் சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் கில், ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்திற்கு கருண் நாயர் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

இதைத்தொடர்ந்து சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக சர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. வேகப்பந்து வீச்சு யூனிட்டில் சிராஜ், பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இடம் பெறலாம். ஸ்விங் கண்டிஷன் இருந்தால் பிரசித் கிருஷ்ணா இடத்திற்கு அர்ஸ்தீப் சிங் வரலாம்.

இதையும் படிங்க : 484-9.. கில்கிறிஸ்டின் 17 ஆண்டு சாதனையை உடைத்த ரஹீம்.. இலங்கை அணி பரிதாபம்.. பங்களாதேஷ் அபாரம்

இந்திய பிளேயிங் XI: ஜெயஸ்வால் கேஎல்.ராகுல், சாய் சுதர்சன், கில், கருண் நாயர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாக்கூர், பும்ரா, சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

- Advertisement -