உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு ஐபிஎல் தொடர் ஒரு காரணமாக இருந்தது எனவும் மேலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை மாற்றி அமைக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மிட்சல் ஜான்சன் விமர்சனம் செய்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதல்முறையாக தகுதி பெற்று வந்த தென் ஆப்பிரிக்க அணியிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா அணியின் இந்த தோல்வி ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை
இதுகுறித்து மிட்சல் ஜான்சன் கூறும்பொழுது “ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் மற்றும் ஹேசில்வுட் இந்த நால்வரையும் எங்களுடைய பந்துவீச்சின் வெற்றிகரமான நால்வர் என இனியும் நாங்கள் லாக் செய்ய முடியாது. மேலும் சமீப காலத்தில் ஹேசில்வுட் உடல் தகுதி கவலைக்குரிய வகையில் இருந்து வந்ததை நாம் பார்த்தோம். இந்த நிலையில் அவர் தேசிய அணிக்கான தயாரிப்புகளுக்கு முன்னுரிமை தராமல் ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை கொடுத்தார். இது பலரது புருவங்களையும் உயர்த்தி இருக்கிறது. மேலும் மூன்றாவது நாளில் கூட லயன் பந்துவீச்சு நன்றாக இல்லை”
“அதே சமயத்தில் ஆசஸ் தொடருக்கு மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரர்கள் காத்திருந்தால் அது நல்ல மனநிலையா? என்கின்ற கேள்வி எழுகிறது. எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் இளம் டெஸ்ட் வீரர்களை உருவாக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”
இவர்கள் தயாராக இருக்கிறார்கள்
“தற்போது சாம் கான்ஸ்டாஸ், ஜோஸ் இங்லீஷ் மற்றும் ஸ்காட் போலன்ட் போன்ற வீரர்கள் வெளியில் இருக்கிறார்கள். குறிப்பாக போலன்ட் 36 வயதானவராக விளிம்பு நிலையில் இருக்கிறார். அதே சமயத்தில் எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். இவர்கள் கிடைக்கும் வாய்ப்பு பயன்படுத்திக் கொள்பவர்களாக இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்துல ஜெயிக்காது.. ஆனா இத கட்டாயம் செய்யும்.. ஸ்டெய்ன் கணிப்பு.. இந்திய ரசிகர்கள் கோபம்
“மேலும் கேமரூன் கிரீன் பேட்டிங் வரிசை எனக்கு சரியானதாக தெரியவில்லை. அவர் இன்னிங்ஸில் சேர்த்து மொத்தம் ஐந்து பந்துகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். குறிப்பாக லபுசேன் பேட்டிங் ஃபார்ம் இல்லாததுதான் எல்லாவற்றிற்கும் காரணமாக அமைகிறது. இதை மறைப்பதற்கு பேட்டிங் ஆர்டரை மாற்றுவதால் எதுவும் நடந்து விடாது. எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக இரண்டு புதிய துவக்க ஆட்டக்காரர்கள் மட்டும் இல்லாமல் மூன்றாவது இடத்திற்கும் சரியான வீரரை கண்டுபிடிக்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.






