இந்தியா இங்கிலாந்துல ஜெயிக்காது.. ஆனா இத கட்டாயம் செய்யும்.. ஸ்டெய்ன் கணிப்பு.. இந்திய ரசிகர்கள் கோபம்

0
543
Steyn

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே துவங்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் கூறியிருக்கிறார்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இந்த மாதம் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இரண்டு அணிகளுக்கும் முதல் தொடர் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கிறது.

- Advertisement -

ஸ்டோக்ஸ் மற்றும் கில்

இங்கிலாந்து அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது உள்நாட்டில் விளையாடுவது அந்த அணிக்கு பெரிய சாதகமாக இருக்கிறது. அதே சமயத்தில் அந்த அணிக்கு அனுபவம் வாய்ந்த கேப்டன் ஸ்டோக்ஸ் இருக்கிறார். அதே சமயத்தில் அந்த அணிக்கு முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் அடைந்திருப்பது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்புக்கு அனுபவம் மற்ற கில் கேப்டனாக இருப்பதும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என அனுபவ வீரர்கள் இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று இருப்பதும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்திய இளம் வீரர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டு இருப்பதால், இங்கிலாந்திலும் மேஜிக் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

டேல் ஸ்டெய்ன் கணிப்பு

இந்த டெஸ்ட் தொடரை பொறுத்தவரையில் இதுவரையில் கணித்துள்ள பெரும்பாலான முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து அணி தொடரை வெல்லும் எனவும், இந்திய அணியால் இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுக்க முடியாது எனவும் எதிர்மறையாக கூறி வந்தார்கள். தற்போது இதற்கு கொஞ்சம் மாற்றாக டேல் ஸ்டெய்ன் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : நாங்க ஆடறப்ப ஆஸி அந்த மோசமான வார்த்தையை சொன்னாங்க.. ஸ்லெட்ஜிங் நடந்தது உண்மை – பவுமா வெளியிட்ட தகவல்

இது குறித்து டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது ” இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எல்லா போட்டிகளுமே மிகவும் நெருக்கமாக இருக்கும். அதே சமயத்தில் எல்லா போட்டிகளுக்கும் முடிவு கிடைக்கும். எந்த ஒரு அணியும் போட்டியை ஒருதலைப் பட்சமாக வெல்ல முடியாது. இதை வைத்து பார்க்கும் பொழுது இங்கிலாந்து அணி இந்த தொடரை வெல்லும் என நான் நினைக்கிறேன். அதே சமயத்தில் தொடரின் முடிவு 3-2 என மிகவும் நெருக்கமாகவே இருக்கும்” என கூறியிருக்கிறார். இந்திய அணி தோற்கும் என தெரிவித்திருப்பதால் இந்திய ரசிகர்கள் இதை விமர்சனம் செய்து வருகிறார்கள்!

- Advertisement -