ஓபனா சொன்னா… நான் அந்த ஒரு விஷயத்தை சரி செஞ்சே ஆகணும்.. கில் எனக்கு இதுல உதவி பண்றாரு – சாய் சுதர்சன் பேட்டி

0
283
Sai

நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்ற குஜராத் வீரர் சாய் சுதர்சன் தன்னுடைய பேட்டிங் மற்றும் மனநிலை குறித்து விரிவாக பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் இரண்டாவதாக 200 ரன்கள் நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு இறுதிவரை களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் சாய் சுதர்சன் சதம் அடித்து, 61 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இது அவருக்கு இரண்டாவது ஐபிஎல் சதமாக பதிவாகியது. மேலும் அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

பிரகாசமான வேறு வாய்ப்புகள்

தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு மிகச்சிறந்த முறையில் சாய் சுதர்சன் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் மொத்தம் 600 ரன்கள் தாண்டி எடுத்து அதிக ரன் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி வைத்திருக்கிறார். இதன் மூலம் இந்த ஆண்டு அவரே இதை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

மேலும் ஐபிஎல் தொடரில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெற்று இருப்பதால், அந்த இடத்திற்கு சாய் சுதர்சன் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படலாம் என மிக உறுதியான பேச்சுகள் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

இதில் முன்னேற வேண்டும்

இது குறித்து பேசி உள்ள சாய் சுதர்சன் கூறும்பொழுது ” நீங்கள் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருந்தால் நீங்கள் அணியை தொடர்ந்து எடுத்துச் சென்று வெல்ல வைக்க வேண்டும். எனக்கு இதற்கு முன்பு கிடைத்த இப்படியான சில வாய்ப்புகளை தவற விட்டு விட்டேன். ஆனால் இன்று அப்படி செய்யக்கூடாது என்று நான் முடிவு செய்தேன். அவர்கள் ஆறு முதல் பத்தாவது ஓவர் வரையில் சிறப்பாக பந்து வீசினார்கள். அதே சமயத்தில் எங்களுக்கு 12 மற்றும் 13 வது ஓவரில் பெரிய ரன்கள் வந்தது. அது நின்று விளையாட அழுத்தத்தை குறைத்தது. தற்போது நேர்மையாக நான் என்னை கொஞ்சம் நம்ப ஆரம்பித்தேன்”

இதையும் படிங்க : 1 இடம்.. 3 டீம் போட்டி.. மும்பை டெல்லி லக்னோ ப்ளே ஆப் வர என்ன செய்யணும்? – முழு அலசல்

“ஒரு பேட்ஸ்மேனாக பல மாற்றங்கள் செய்யவில்லை. ஆனால் நான் மனநிலையில் நல்லபடியாக முன்னேறி இருக்கிறேன். நான் சுழல் பந்துவீச்சாளர்களை சிறந்த முறையில் தாக்கி விளையாடலாம். அதே சமயத்தில் 15 ஓவர்கள் தாண்டி நான் நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. இதை நான் சரி பார்த்து வருகிறேன். மேலும் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவது மிகவும் முக்கியம். இந்த விஷயத்தில் எனக்கு கில் அறிவுரை கூறிய மிகவும் உதவியாக இருந்து வருகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -