வெளியேறிய வீரர்கள்.. ஆனால் பாண்டிங் செய்த துணிச்சலான மாஸ் சம்பவம்.. இந்திய ரசிகர்கள் பாராட்டு

0
617
Ponting

இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாக ஐபிஎல் தொடர் பாதையில் இடைநிறுத்தப்பட்டு வெளிநாட்டு வீரர்கள் வெளியேறிய நிலையில், பஞ்சாப் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் செய்த காரியம் இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்கள் புதிய தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் டெல்லி கேப்பிட்டல் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை கொண்டு வந்தது. அவரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அணியை உருவாக்குவதில் ஆரம்பித்து அணியை களத்தில் கொண்டு செல்வது வரை சிறப்பாக இந்த முறை பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -

வெளியேறிய வெளிநாட்டு வீரர்கள்

பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வந்த பிஎஸ்எல் தொடரில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் உயிர்பிழைத்தால் போதும் என கதி கலங்கி தங்கள் நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இதை அந்தத் தொடரில் விளையாடிய பங்களாதேஷ் வீரர் ரிசாத் உசைன் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அதே சமயத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் வெளியேறிய போதிலும் கூட பெரிய அளவில் பதட்டம் இல்லாமல் அவர்கள் வழி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அவர்கள் இந்தியா திரும்பி மீண்டும் ஐபிஎல் தொடர் விளையாட ஆர்வமாகவே இருக்கிறார்கள்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் செய்த சம்பவம்

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி செல்ல முடிந்த சூழ்நிலையில் கூட அப்படி செய்யாமல் தொடர்ந்து டெல்லியிலேயே இருப்பதற்கு முடிவு செய்தார். இது மட்டும் இல்லாமல் தனது மொத்த அணிக்கும் நம்பிக்கை கொடுத்து, அணியில் இருந்து யாரும் வெளியேறாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : முத்தரப்பு இறுதிப் போட்டி: ஸ்மிருதி மந்தானா சதம் விளாசல்.. இலங்கை எதிராக 342 ரன்கள் குவித்த இந்தியா

தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து மார்க்கோ யான்சன் மட்டுமே வெளியேறி இருக்கிறார். அவரும் தென் ஆப்பிரிக்கா செல்லாமல் துபாயில் தங்கி இருக்கிறார். ஸ்டோய்னிஸ் தலைமையில் பஞ்சாப் வெளிநாட்டு வீரர்கள் கிளம்ப முடிவு செய்து பொழுது, ரிக்கி பாண்டிங் அவர்களிடம் பேசி, அவர்களுக்கு முன்மாதிரியாக தானே டெல்லியில் இருப்பதாக கூறி, மேலும் அணியின் எல்லா வெளிநாட்டு வீரர்களையும் டெல்லியில் தங்க வைத்திருக்கிறார். இது அவரது குணாதிசயத்தை காட்டுகிறது என்றும் இது அவரால் மட்டுமே செய்ய முடிந்தது என்றும் பஞ்சாப் அணி பாராட்டி இருக்கிறது. மேலும் இந்திய ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -