என் மகன் ஆயுஸ் மத்ரே சூரியவன்சி மாதிரி ஆடக்கூடாது.. தோனி அவன்கிட்ட சொன்னது வேற – தந்தை பேட்டி

0
372
Dhoni

சிஎஸ்கே அணிக்கு இளம் நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் ஆயுஸ் மத்ரேவின் தந்தை தன்னுடைய மகன் வைபவ் சூரியவன்சி போல விளையாட கூடாது என்று கூறி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 வயதான ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் சூரியவன்சி 35 பந்தில் அதிரடி சதம் அடித்து பெரிய சாதனைகளை உடைத்திருக்கிறார். இதன் மூலமாக அவன் இந்தியா தாண்டி உலகெங்கும் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் இளம் சூப்பர் ஸ்டார்

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு மும்பையை சேர்ந்த 17 வயதான ஆயுஸ் மத்ரே கடந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக 48 பந்தில் 94 ரன்கள் குவித்து இளம் நட்சத்திரமாக மாறி இருக்கிறார். இவருடைய பேட்டிங் அதிரடியாக மட்டும் இல்லாமல் பேட்டிங் தொழில்நுட்பம் சார்ந்து மிகவும் புத்திசாலித்தனமாகவும் இருப்பது இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதை காட்டுகிறது.

தற்போது ஐபிஎல் வரலாற்றில் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு சிஎஸ்கே அணி மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இருந்தபோதிலும் கூட இந்த கடினமான நேரத்தில் சிஎஸ்கே அணிக்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆவது விளையாடக்கூடிய வகையில் ஆயுஸ் மத்ரே கிடைத்திருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சூரியவன்சி மாதிரி ஆடக்கூடாது

இந்த நிலையில் ஆயுஸ் மத்ரே தந்தை பேசும் பொழுது “என் மகனும் சூரியவன்சியும் வேறு வேறு வகையான பெயர்கள். அவரை யாராவது சூரியவன்சியுடன் ஒப்பிட்டால் அதை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நான் சொல்லி இருக்கிறேன். அவரைப் பார்த்து வேகமாக விளையாட கூடாது எனவும் சதம் அடிக்க முயற்சி செய்யக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறேன். என் மகன் அவருக்கு இயல்பான வழியில் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க : சிஎஸ்கேவில் வன்ஸ் பேடிக்கு பதிலாக.. 28 பந்தில் சதமடித்த இந்திய வீரர் சேர்ப்பு.. யார் இந்த உர்வில் படேல்?

“தோனி என் மகனிடம் நீ நன்றாக விளையாடினாய், எதிர்காலத்தில் இதைப்போலவே சிறப்பாக விளையாட வேண்டும் என்று மட்டும்தான் கூறினார். அவர் இரண்டு வார்த்தைகள் மட்டுமே பாராட்டி கூறியிருந்தாலும், என் மகன் மிகவும் மதிக்கக் கூடியவர் என்பதால் அது மிகவும் பெரிய வார்த்தைகளாக அவனுக்கு அமைந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்

- Advertisement -