ஐபிஎல் 2025..சிஎஸ்கே அணியின் ஸ்கவுட்டிங் மோசமாக இருக்கிறது.. கவாஸ்கர் விமர்சனம்

0
8

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக செயல்பட்டது. இதனால் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்தது மட்டும் அல்லாமல் தொடரை விட்டு வெளியேறிய முதல் அணி என்ற சோகமான சாதனையும் படைத்திருக்கிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர்களை சரியாக தேர்வு செய்யாததே இந்த நிலைக்கு காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை ஒரு அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்கள் தங்களுடைய ஏல யுக்திகளை சரியாக அமைக்க வேண்டும்.

- Advertisement -

ஸ்கவுட்டிங் குழு சரியில்லை:

இதே போல் மற்ற அணி சேர்ந்த வீரர்களை தேடும் குழு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். ஆனால் சிஎஸ்கே வின் scouting குழு  சரியாக செயல்படவில்லை என்று நினைக்கின்றேன். வீரர்களை தேடுகிறேன் என்ற பெயரில் வெறும் ஜார்க்கண்ட் லீக், உபி லீக் என மற்ற மாநிலங்களில் நடைபெறும்.

டி20 லீக் தொடரில் மட்டும் போதாது ஏனென்றால் அது போன்ற டி20 தொடரில் பந்துவீச்சும் மிகவும் மோசமானதாக இருக்கும். மைதானமும் சிறிய அளவிலே இருக்கும். எனவே அதை நம்பி ஐபிஎல் தொடருக்கு வீரர்களை எடுக்கக்கூடாது. இது போன்று உள்ளூர் தொடர்களின் சிறப்பாக விளையாடும் வீரர்கள் எல்லாம் சர்வதேச தரத்தில் உடைய பவுலிங் எதிர்கொள்ளும் போது தோல்வியை தழுவுகிறார்கள்.

- Advertisement -

டி20 லீக் தொடரில் தேடாதீங்க:

இதேபோன்று உங்களுடைய வீரர்களை தேடும் குழு பவுலர்களை கண்டுபிடிக்க கவனம் செலுத்தினார்கள் என்றால் குறைந்தபட்சம் பவுலிங் படையாது பலமாக இருக்க வேண்டும். இதன் மூலம் எதிரானியின் ரன் குவிப்பை உங்களால் கட்டுப்படுத்தி முக்கியமான தருணத்தில் விக்கெட்டுகளை எடுக்க முடியும்.

இதையும் படிங்க: சூரியவன்சி பற்றி கில் அப்படி பேசி இருக்க கூடாது.. குஜராத் கோச் நானே சொல்றேன் – பார்த்திவ் படேல் பேச்சு

இதன் மூலம் டி20 போட்டிகளில் நீங்கள் வெற்றி பெறலாம். பலவீரர்கள் முடிவெடுக்கும் போது தங்களைப் பற்றி யோசிக்காமல் அணியை பற்றி யோசிப்பார்கள். இம்முறை தோனி தொடர்ந்து விளையாடுவதும் அணிக்காக தான் என்று நினைக்கின்றேன். இனி எதிர்காலத்தில் அவர் எடுக்கப் போகும் முடிவும் சிஎஸ்கே அணியை பொறுத்துதான் இருக்கும். அவருக்கு எது சரியோ அதை அவர் செய்ய மாட்டார் அணியை தான் தோனி பார்ப்பார் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -