நடப்பு ஐபிஎல் தொடரில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. இதற்கான பிளேயிங் லெவனை எவ்வாறு அமைத்தால் சிஎஸ்கே அணி பலமானதாக இருக்கும் என பார்க்கலாம்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஒன்பது போட்டிகளில் ஏழு தோல்விகள் உடன் 4 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடன் 11 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு முடிந்திருக்க, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு அதிகபட்சமாக இருக்கிறது.
சிஎஸ்கேவுக்கு கெட்டதில் நல்லது
தற்போது சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இல்லை என்கின்ற காரணத்தினால் அவர்கள் அடுத்த ஆண்டுக்கான புதிய வீரர்களை பரிசோதித்துப் பார்க்க முடியும். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை எஞ்சி இருக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு நல்லவிதமாக முடித்துக் கொள்ள சிஎஸ்கே முயற்சி செய்ய வேண்டும்.
தற்போது சிஎஸ்கே அணிக்கு ஆயுஸ் மத்ரே மற்றும் டிவால்ட் பிரிவிஸ் இருவரும் பாசிட்டிவான விஷயமாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் வருகை சிஎஸ்கே அணியின் பேட்டிங் யூனிட்டை கொஞ்சம் பலப்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணிக்கு இன்னும் இரண்டு மாற்றங்கள் செய்ய வேண்டியதாக இருக்கிறது.
சிஎஸ்கே செய்ய வேண்டிய மாற்றங்கள்
நாளை சிஎஸ்கே அணியில் தீபக் ஹூடா இடத்திற்கு இளம் அதிரடி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் வன்ஸ் பேடியை களம் இறக்க வேண்டும். இவர் நல்ல முறையில் விளையாடுவார் என்றால் அடுத்த வருடத்திற்கும் இவரை தக்க வைத்துக் கொள்ள முடியும். மேலும் ஐந்து கோடிக்கு மேல் கொடுத்து வாங்கி இருக்கும் தீபக் ஹூடாவை அடுத்த ஆண்டு வெளியேற்றிவிடலாம்.
இத்துடன் பத்திரனாவை பொதுவாக 12 ஓவர்கள் முடிந்து பந்துவீச்சுக்கு கொண்டு வருகிறார்கள். இதனால் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதன் காரணத்தால் போட்டியில் எல்லா பாகங்களிலும் பந்து வீசக்கூடிய சிறப்பான வேகப்பந்துவீச்சாளரான நாதன் எல்லீஸ்க்கு வாய்ப்பு கொடுக்கலாம். இந்த இரண்டு மாற்றங்களும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் யூனிட்டை பலமானதாக மாற்றும். மேலும் பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்கவும் உதவும்.
இதையும் படிங்க : நான் பெரிய சிக்ஸ் அடிக்கிறதுக்கான காரணம் இதுதான்.. ஆனா வீட்டுல சாப்பாட்டுக்கே கஷ்டம் – வைபவ் சூரியவன்சி பேட்டி
சிஎஸ்கே பிளேயிங் லெவன் :
ஆயுஸ் மத்ரே, ஷேக் ரசீத், சாம் கரன், டிவால்ட் பிரிவிஸ், சிவம் துபே, வன்ஸ் பேடி, தோனி, ரவீந்திர ஜடேஜா, அன்சூல் காம்போஜ், நூர் அகமத், நாதன் எல்லீஸ் மற்றும் இம்பேக்ட் பிளேயராக கலீல் அகமத்.






