நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 போட்டிகள் தோல்வி மற்றும் 2 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
பிளே ஆப் சுற்றை விட்டு முதல் அணியாக வெளியேறி இருக்கும் நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு தற்போதைய சிஎஸ்கே குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
மோசமான அணித் தேர்வு
ஐபிஎல் தொடரில் இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான அணியாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஆக்ஸனிலேயே பெரிய தவறை செய்த சிஎஸ்கே மாறிவரும் டி20 கிரிக்கெட்டுக்கு தகுந்த வகையில் வீரர்களை வாங்காமல், பழைய அணுகு முறையிலேயே வீரர்களை தேர்வு செய்து பெரிய அடி வாங்கியது.
இதற்கு முன்னர் இதேபோன்று சிஎஸ்கே செயல்பட்டு இருந்தாலும் தனியாக நின்று வெற்றிகளை பெற்றுத் தரக்கூடிய மேட்ச் வின்னர்கள் அதிக அளவில் சென்னை அணியில் இருந்தார்கள். அதனால்தான் சிஎஸ்கே ஐந்து முறை பட்டத்தை வெல்வதற்கு அது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே பட்டத்தை வெல்வதற்கு முக்கிய வீரர்களில் ஒருவரான அம்பாதி ராயுடு தற்போதைய சிஎஸ்கே குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பணிவாக இருக்க வேண்டும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இது மிகக்குறைந்த தோல்வி என்பது அனைவருக்குமே தெரியும். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு சிறந்த பாடமாகும். நீங்கள் உங்களது வெற்றிகளில் ஓய்வெடுத்து எதிர்காலத்தை கவனிக்கவில்லை என்றால் இதுதான் நடக்கலாம். இனிமேல் சிஎஸ்கே ஆட்டத்துடன் பரிணமிப்பதில் மிகவும் விழிப்புடன் செயல்படுவார்கள். இந்த ஆண்டு சீசன் முடிவடைந்து விட்டதாக எம் எஸ் தோனி ஏற்கனவே ஒப்புக்கொண்டு விட்டார். எனவே அடுத்த ஆண்டுக்கான அணித்தேர்வில் தோனி தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன்.
இதையும் படிங்க:இந்த 4 பசங்க இந்திய கிரிக்கெட்டில் பெரிய ஆளா வருவாங்க.. குறிப்பா அவரு எங்கள மூச்சு வாங்க வச்சிட்டாரு – ரவி சாஸ்திரி
பேட்டிங் வரிசையில் நாம் தற்போது பிரகாசமான வீரர்களை பார்த்திருக்கிறோம். ஆயுஸ் மற்றும் பிரெவிஸ் போன்ற அதிரடியான வீரர்கள் தற்போது கிடைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் அணியை நிலை நிறுத்தி ஆட்டம் எப்போதும் நம்மை விட பெரியது என்பதை அவர்களுக்கு நினைவூட்ட இது போன்ற ஒரு சீசன் எடுக்கும். அதனால் நீங்கள் அடிப்படைகளை கவனித்து பணிவாக இருக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.






