இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆர் சி பி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இனி யாரும் ஐபிஎல் தொடரில் சாதிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய பிரமாண்ட சாதனையை படைத்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
சரிந்து விழுந்த பஞ்சாப்
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு ஆறு ஓவர்களில் 62 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து அடுத்த 14 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே சேர்த்து 157 ரன்கள் மட்டுமே ஆறு விக்கெட் இழப்புக்கு எடுத்தது. பவர் பிளேவுக்கு வெளியில் ஆர்சிபி அணி சிறப்பான முறையில் பந்து வீசியது.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணிக்கு இந்த போட்டியில் வாய்ப்பு பெற்று மூன்றாவது இடத்தில் விளையாடிய படிக்கல் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவர் இறுதியாக 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
விராட் கோலி பிரம்மாண்ட சாதனை
இதைத் தொடர்ந்து இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்தார். அவருக்கு ஐபிஎல் தொடரில் இது 67வது அரைசதமாக அமைந்தது. மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையையும் படைத்தார். மேலும் இறுதி வரை களத்தில் இருந்து 54 பந்தில் 73 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணி மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 66 அரை சதங்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது விராட் கோலி இதை உடைத்திருக்கிறார். டேவிட் வார்னர் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விராட் கோலி படத்திற்கும் இந்த சாதனையை இனி யாரும் உடைப்பதும் மிகவும் கடினமானது என்று கருதப்படுகிறது.
இதையும் படிங்க : ஒரே நாளில் 2 சம்பவம்.. ஒரு கேப்டனுக்கு மரியாதை, இன்னொரு கேப்டனுக்கு அவமரியாதை.. என்ன நடந்தது?
ஐபிஎல் தொடரில் அதிக அரைசதங்கள் :
67- விராட் கோலி
66- டேவிட் வார்னர்
53- ஷிகர் தவான்
45- ரோஹித் சர்மா
43- ஏபி டிவில்லியர்ஸ்
43- கேஎல்.ராகுல்
40- சுரேஷ் ரெய்னா






