ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமான தோல்வியை நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக பெற்றது. சேப்பாக்கம் மைதானம் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணி தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது.
20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்தது. ஆனால் இந்த இலக்கை கே கே ஆர் அணி 10 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் எட்டி அசத்தியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணியும் ஒன்பதாவது இடத்தை பிடித்து இருக்கிறது.
மிகவும் மோசமான தோல்வி:
இந்த நிலையில் சிஎஸ்கே அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தனது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், சிஎஸ்கே அணியின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான தோல்வியாக இதை நான் பார்க்கின்றேன். பவர் பிளேவில் சிஎஸ்கே ஆடிய விதத்தை பார்த்தால் டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி எடுத்தது போல் இருக்கிறது.
பிளேயிங் லெவனில் உள்ள வீரர்கள் ஆடும் விதத்தை பார்த்தால் ஏதோ பழைய ஞாபகங்களுக்காக விளையாடுவது போல் தெரிகிறது. யாருமே எதிர்பாராத ஒரு யோசனையை நாம் பின்பற்ற வேண்டும். அதை போல் செய்தால் தான் இனி வெற்றி கிடைக்கும். தற்போது ருதுராஜ்க்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், ஏன் விலை போகாத வீரர்கள் பட்டியலில் இருக்கும் நல்ல வீரர்களை ஏன் தேர்வு செய்யக்கூடாது.
பிரித்வி ஷாவை கொண்டு வாங்க;
இது போன்ற காலகட்டத்தில் ஏன் பிரித்வி ஷாவை அணிக்குள் எடுத்து வரக்கூடாது. இதை நீங்கள் செய்வீர்களா? உங்களுடைய யுத்திகள் அமைக்கும் பணிகள் கூட மிகவும் மோசமாக இம்முறை அமைந்திருக்கிறது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியில் ருதுராஜ்க்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதில் சிஎஸ்கே அணி ஒரு இளம் வீரர் அல்லது ஒரு வெளிநாட்டு வீரரை வாங்கிக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: இந்தியர்களை தப்பா சொல்லாதீங்க.. பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்கு டேவிட் வார்னர் பதிலடி – என்ன நடந்தது?
சிஎஸ்கே அணியில் ஏற்கனவே இருக்கும் ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா போன்ற வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறி வருகின்றனர். இதனை சரி செய்ய வேண்டுமென்றால் ருதுராஜ்க்கு பதில் புதிய வீரரை அணியில் கொண்டு வர வேண்டும். தென்னாப்பிரிக்காவில் பிரவீஸ், இந்திய வீரர் பிரித்விஷா போன்றோரை ஏலத்தில் விலை போகவில்லை. இதனால் அவர்களை மீண்டும் எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.






