தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் உலக அளவில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட டி20 தொடராக சாதனை படைத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாசன் அலி மக்கள் கூடிய விரைவில் ஐபிஎல்லை புறக்கணித்துவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் பிரிமியர் லீக் தொடரை ரசிப்பார்கள் என்று அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
மக்கள் ஐபிஎல் தொடரை புறக்கணிப்பார்கள்
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் திருவிழா கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தற்போது 18 ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் இது சர்வதேச அளவில் பலராலும் விரும்பக் கூடிய ஒரு பிரான்சிஸ் டி20 தொடராக இது உள்ளது. ஐபிஎல்-லை பார்த்து காப்பியடித்து மற்ற சர்வதேச நாடுகள் டி20 தொடரை நடத்தினாலும் அது ஐபிஎல் அளவிற்கு பெரிய வரவேற்பை பெறுவதில்லை.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஹாசன் அலி மக்கள் கூடிய விரைவில் ஐபிஎல் தொடரை புறக்கணித்துவிட்டு பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல் டி20 தொடருக்கு ஆதரவளிப்பார்கள் என்று சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சமீபத்திய மோசமான செயல்பாடுகள் பாகிஸ்தானின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரை பாதிப்படைய செய்வதாகவும் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
பாகிஸ்தான் வீரர் பேட்டி
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நிச்சயமாக நல்ல பார்வையாளர்கள் இருக்க வேண்டும். நாங்கள் ஐபிஎல் தொடரோடு மோதுகிறோம். ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பிஎஸ்எல் தொடரை ஒழுங்கமைக்க முயற்சிகள் செய்ய வேண்டும். டி20 லீக் தொடரை பொறுத்தவரை பொழுதுபோக்கு மற்றும் செயல் திறன் மட்டுமே பார்வையாளர்களை முற்றிலும் ஈர்க்கும். எனவே முழு பிஎஸ்எல் தொடரிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டால் பார்வையாளர்கள் ஐபிஎல் தொடரை விட்டு இந்த தொடரை பார்ப்பதில் கவனம் செலுத்துவார்கள். எனவே பிஎஸ்எல் தொடர் நமக்கு எப்படி அமைகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க:யார் பெருமையையும் நான் மறைக்க மாட்டேன்.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு செஞ்சிருக்கேன் – விராட் கோலி பேட்டி
தேசிய அணி சிறப்பாக செயல்படாத போது அது உள்ளூர் பிரான்சிஸ் லீக் டி20 தொடர்களை பாதிக்கிறது. ஆம் சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடர்பல் முதல் நியூசிலாந்து தொடர் வரைக்கும் எங்கள் முடிவுகள் சிறப்பாக அமையவில்லை. எங்கள் அணியில் பல புதிய வீரர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்கள், சிறப்பாக செயல்படுவதற்கு சிறிது காலம் நிச்சயமாக எடுக்கும். எனவே பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தரம் உயரும் போது, உள்ளூர் டி20 தொடர்களும் தானாகவே உயரும். எனவே எங்களால் முடிந்த வரை சிறப்பாக செயல்பட அனைத்து விதத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர் பேசி இருக்கிறார்.






