சிஎஸ்கே ஐபிஎல் வரலாற்றில்.. நேற்று வெளியே தெரியாத மோசமான சாதனை.. கொதித்துப்போன ரசிகர்கள்

0
196
CSK

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை எடுத்து சிஎஸ்கே அணி ஒரு மோசமான சாதனையை படைத்திருக்கிறது. ஏற்கனவே கோபத்தில் இருக்கும் சிஎஸ்கே ரசிகர்களை அது மேலும் கோபம் அடைய வைத்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 219 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணியால் கொஞ்சம் அதிரடி காட்ட முடிந்தபோதிலும் 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த போட்டியிலும் கடைசி ஆறு ஓவர்கள் மிக மோசமான முறையில் சிஎஸ்கே பேட்டிங் செய்து தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிஎஸ்கே செய்த மோசமான சாதனை

நடப்பு ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே அணி விளையாடுகிறது. இதில் முதலில் தங்களது சொந்த மைதானத்தில் மும்பை அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு நான்கு போட்டிகளில் ஆர்சிபி, ராஜஸ்தான், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து தோற்று இருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கும் தள்ளப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி கடைசி நான்கு போட்டிகளிலும் இரண்டாவதாக பேட்டிங் செய்து ரன்களை துரத்தியது. மேலும் சிஎஸ்கே தன்னுடைய ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து நான்கு முறை ரன்களை துரத்தும் பொழுது தோல்வி அடைந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணியின் ரன் துரத்தல் மிகவும் மோசமான முறையில் மாறி இருப்பதை இது காட்டுகிறது. மேலும் ஒரு முக்கிய விஷயத்தையும் இது காட்டுகிறது.

- Advertisement -

சிஎஸ்கே-வின் மோசமான சாதனைக்கு காரணம்

தற்போது சிஎஸ்கே அணி தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் ரன் துரத்தலில் ஈடுபட்ட பொழுது ஒவ்வொரு போட்டிகளும் 180 க்கும் மேற்பட்ட ரன்கள் கொடுக்கப்பட்டது. சிஎஸ்கே அணியால் 180 க்கும் மேற்பட்ட ரன்னை துரத்தி வெற்றி பெற கடந்த ஐந்து ஆண்டுகளாக முடியவில்லை. காரணம் அந்த அணிக்கு இரண்டாவது பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை துரத்துவதற்கு நல்ல பவர் ஹிட்டர்கள் இல்லை என்பதுதான் முக்கிய காரணம்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. சிஎஸ்கே கோட்டை விட்டார்கள்.. நடு ஓவர்களில் கூடுதலாக 20 ரன்கள் அடித்திருக்கனும்.. ராபின் உத்தப்பா

சிஎஸ்கே அணியில் பவர் ஹிட்டர்கள் இல்லை என்பது அந்த அணியின் ரன் துரத்தல் தோல்விகளுக்கு ஒரு காரணமாக இருந்த போதிலும், இன்னொரு பக்கத்தில் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது விக்கெட்டுகளை இழப்பதை பற்றி கவலைப்படாமல் மற்ற அணிகள் ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பித்திருக்கின்றன. இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தற்போது டி20 கிரிக்கெட் விளையாடுவதற்கு சுத்தமாக தகுதி இல்லாத அணியாக சிஎஸ்கே இருப்பதாக அந்த அணியின் ரசிகர்களே கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -