பும்ரா சூர்யகுமார் யாதவ் இல்லை.. மும்பை அணிக்கு இவரைத்தான் நான் முதலில் இருப்பேன் – ஆஸி முன்னாள் வீரர் பேட்டி

0
321

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் தனது வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் மும்பை அணி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

மும்பை அணியின் பயணம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போலவே ஐபிஎல் தொடரில் மிக வலுவான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா தலைமையில் ஐந்து ஐபிஎல் பட்டங்களை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை அணி தொடர்ந்து சிக்கலில் இருந்து வருகிறது. ரோஹித் சர்மாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் மற்றும் கேப்டன்ஷிப் காரணமாகவே அவரை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மும்பை நிர்வாகம் நியமித்தது.

மேலும் கடந்த ஆண்டு சொதப்பலான செயல் திறனை மும்பை இந்தியன்ஸ் வெளிப்படுத்திய நிலையில், இந்த வருடமும் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து அதற்கு பின்னர் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா கடந்த சில சீசன்களாகவே மும்பை அணிக்கு மோசமான தொடக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் ரோஹித் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தரம் மட்டுமே நிரந்தரம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “மும்பை அணிக்காக ரோகித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாமல் போய்விட்டார் என்று யாரோ ஒருவர் சமூக ஊடகங்களில் நான் விமானத்தில் பேசிக் கொண்டிருந்ததாக நான் கேள்விப்பட்டேன். அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டால், மும்பை அணியை பொறுத்தவரை முதல் தேர்வு எப்போதுமே ரோகித் சர்மா தான். அவர் தொடக்க இடத்தில் பேட்டிங் செய்கிறார்.

இதையும் படிங்க:உங்க சண்டையை ட்ரெஸ்ஸிங் ரூமில் வெச்சுட்டு.. அவரை சுதந்திரமா விளையாட விடுங்க.. முன்னாள் உலகக் கோப்பை வீரர் அறிவுரை

அவரது பேட்டிங் இன்னும் தரமாக இருக்கிறது. ஹர்திக் மற்றும் மும்பை அணியின் மற்ற வீரர்களுக்கு ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிகவும் முக்கியமானது. பார்ம் என்பது தற்காலிகமானது, தரம் என்பது மட்டுமே முற்றிலும் நிரந்தரமானது. ரோஹித் சர்மா மிகவும் உயர்நிலையான தரமான ஒரு வீரர். நீங்கள் சிறப்பாக செயல்படாத போது உங்களை நீங்களே உயர்த்திக் கொண்டு திரும்பவும் பேட்டிங் ஃபார்முக்கு வர மீண்டும் முயற்சி செய்வீர்கள், அதுபோலத்தான் ரோஹித் சர்மாவும் மீண்டும் தனது பழைய பாமை மீட்டெடுத்து சிறப்பாக செயல்படுவார்” என்று அவர் கூறி இருக்கிறார்.

- Advertisement -