நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடரின் 12வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் மும்பை அணிக்காக அறிமுக போட்டியில் களமிறங்கி 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய அஸ்வானி குமார் தனது முதல் போட்டி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அறிமுகப் போட்டியில் 4 விக்கெட்
பஞ்சாப் மொகாலியைச் சேர்ந்த 23 வயது இளம் வீரர் அஸ்வனி குமார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களம் இறங்கி விளையாடினார். கொல்கத்தா அணியின் மிடில் வரிசையை தனது சிறப்பான பந்துவீச்சின் மூலமாக மிடில் வரிசை வீரர்களை ஆட்டம் இழக்க செய்து கொல்கத்தா அணியை 116 ரன்கள் ஆல் அவுட் ஆக முக்கிய காரணமாக அமைந்தார்.
அதற்கு பின்னர் விளையாடிய மும்பை அணி, 12 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த சூழ்நிலையில் தனது முதல் போட்டி அனுபவம் குறித்து பேசிய அஸ்வானி குமார், முதல் போட்டிக்கு முன்பாக சிறிய அழுத்தம் தனக்கு இருந்ததாகவும், ஆனால் அதைத் தாண்டி சிறப்பாக செயல்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
மதிய உணவில் எதுவும் சாப்பிடவில்லை
இதுகுறித்து அஸ்வானி குமார் பேசும்போது “இப்போது நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். போட்டிக்கு முன்பாக எனக்கு சிறிய அழுத்தம் இருந்தது. ஆனால் அணியின் சூழ்நிலைக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும். எனக்கு எந்த விதமான அழுத்தமும் அப்போது ஏற்படவில்லை. மதிய உணவில் நான் எதுவுமே சாப்பிடவில்லை. ஒரு வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டேன். கொஞ்சம் அழுத்தம் இருந்தது ஆனால் பசி இல்லை. இருப்பினும் நான் நன்றாக விளையாடியதாகவே உணர்ந்தேன். அதனால் இப்போது அந்த உணர்வு நன்றாக உள்ளது.
இதையும் படிங்க:டாஸ் போடும்போதே இதை சொன்னேன்.. ஆனா எங்க பிளேயர்ஸ் இதில் கவன குறைவா இருந்தாங்க – கேகேஆர் கேப்டன் பேட்டி
எங்களுக்கு இந்த போட்டியில் திட்டங்கள் இருந்தன, ஆனால் எங்கள் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா இது உங்கள் முதல் போட்டி என்பதால் நீங்கள் மகிழ்ச்சியோடு பந்து வீசுங்கள் என்று கூறினார். நீங்கள் முன்பு பந்து வீசிய விதத்தில் தொடர்ந்து பந்து வீசுங்கள் என்று என்னை ஆறுதல் படுத்தினார். ரசல் பேட்டிங் செய்ய வந்த போது ஹர்திக் பாண்டியா, உன்னை அவர் அட்டாக் செய்து விளையாட முயற்சிப்பார், அதனால் என்னை உடலை நோக்கி பந்து வீசுமாறு கூறினார். கடைசியில் நிலைமை என்னை அவர் அடிக்க என்று வெளியேறினார்” என்று கூறி இருக்கிறார்.






