3 உலக தரமான பவுலர்கள் இருக்கும் போது.. இந்த பிரச்சனைதான் வரும்.. இங்குதான் கோட்டை விட்டோம் – சிஎஸ்கே கேப்டன்

0
1513

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் தோல்வி அடைந்த விதம் குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஆர்சிபி சிஎஸ்கேவை வீழ்த்தியது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி சிஎஸ்கேவின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் பெங்களூர் அணியின் கேப்டன் பட்டி தார் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். 32 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 51 ரன்கள் குவித்து வெளியேறினார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. பெங்களூர் அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆரம்பம் முதலே சிஎஸ்கேவிற்கு நெருக்கடி கொடுத்து வந்தது. இதில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சென்னை அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ரவீந்திர 31 பந்துகளை எதிர்கொண்டு 41 ரன்கள் குவித்தார். இதனால் சிஎஸ்கே 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

தோல்விக்கான காரணம்

இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கூறும்போது “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆடுகளத்தில் 170 ரன்கள் சமமான ரன்களாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. ஆடுகளம் இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. பீல்டிங்கிலும் இன்றைய நாள் எங்களுக்கு மோசமானதாக அமைந்தது. நாளின் இறுதியில் நீங்கள் 170 ரன்கள் துரத்தும் போது வித்தியாசமாக பேட் செய்வதாக உணர்வீர்கள். நீங்கள் கூடுதலாக 20 ரன்கள் துரத்தும் போது விக்கெட் மெதுவாக இருப்பது போல காணப்படும்.

இதையும் படிங்க:17 வருட ஏக்கம்.. வரலாற்று வெற்றி பெற்ற ஆர்சிபி.. கேப்டன் பட்டிதார் அபாரம்.. 50 ரன்னில் சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றி

பந்து பழையதாக மாறிவிட்ட பிறகு ஆடுகளம் மெதுவாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். பவர் பிளேவில் நீங்கள் சற்று வித்தியாசமாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். உங்கள் மனதில் எப்போதும் இருக்கும் ஒரு ஸ்கோரை விட 20 ரன்கள் அதிகமாக இருக்கும் போது நீங்கள் ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்று உணர்வீர்கள். 50 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வி அடைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் அணியில் மூன்று உலக தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது புதிய பேட்ஸ்மேன்கள் அவர்களை எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்று விரும்புவீர்கள். அங்கு தான் ஆட்டம் நிறைய மாறுகிறது. மேலும் நாங்கள் நிறைய கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம் அதுதான் தோல்விக்கு காரணம்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -