சிஎஸ்கே மேட்ச்க்கு நான் 26 பேரை வர சொன்னேன்.. ஆனா அதுக்காக விராட் கோலி வருத்தப்பட்டாரு – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
600

ஐபிஎல் 2025 கிரிக்கெட்டில் தொடரின் 8வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளன.

இந்த சூழ்நிலையில் கடந்த சீசன் குறித்து பெங்களூர் அணியின் தற்போதைய ஆலோசகர் தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே ஆர்சிபி மோதல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கடந்த சீசனில் எடுத்துக்கொண்டால் இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். முதல் பாதியில் பெரிய தோல்விகளை சந்தித்த பெங்களூர் அணி அதற்கு அடுத்த பாதியில் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேவை தோற்கடித்த பெங்களூர் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் பிளே ஆப் சுற்றில் விளையாடியது.

இந்த சூழ்நிலையில் கடந்த சீசனில் லீக் சுற்றில் விளையாடிக் கொண்டிருந்தபோதே தனது ஓய்வு முடிவை அறிவித்த தினேஷ் கார்த்திக், சென்னை அணிக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் விளையாடிய போது தனது குடும்ப உறுப்பினர்கள் 26 பேரை அழைத்திருந்ததாகவும், அதற்காக விராட் கோலி தனது வருத்தத்தை தெரிவித்ததாகவும், பின்னர் இன்னும் சில ஆட்டங்கள் விளையாட வேண்டி வரும் என்று அதற்குப் பின்னர் தெரிந்ததாகவும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

26 பேரை அழைத்தேன்

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும்போது “கடந்த சீசனில் மூன்று வாரங்களுக்கு முன்பாக 8 போட்டிகளில் ஏழு தோல்விகளை சந்தித்தபோது மே 18ஆம் தேதி சென்னை அணிக்கு எதிராக விளையாடுவதே எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்பதை நான் முடிவு செய்தேன். அப்போது அந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக எனது குடும்பத்தில் இருந்து நான் 26 பேரை அழைத்தேன். அதற்காக விராட் கோலி தனக்கு மிகுந்த வருத்தத்தை தந்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க:ஒரு சீசன்ல 1000 ரன் அடிப்பாங்களா.. அபிஷேக் ஹெட்டை நம்பி நாங்க இருக்கோமா? – கிளாசன் பேச்சு

எனவே அதுவே என்னுடைய கடைசி நாள், அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு விடை பெறலாம் என்று நினைத்தேன். ஆனால் பெங்களூர் வீரர்கள் அப்போது சிறப்பான ஆட்டத்தை விளையாடி வெகு தூரம் கடந்து வந்து, நான் இன்னும் சில ஆட்டங்களை விளையாட வேண்டும் என்பதை உணர்த்திவிட்டார்கள்” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். தற்போது தினேஷ் கார்த்திக் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -