ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பலம் வாய்ந்த ஆர்சிபி அணியை தங்களது சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் இதுவரை 33 முறை மோதி உள்ள நிலையில் சிஎஸ்கே அணி 21 முறையும், ஆர்சிபி அணி 11 முறையும் வென்றிருக்கிறது. ஒரு போட்டி மழையால் ரத்தாகி இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆர் சி பி அணி பலம் வாய்ந்ததாக தெரிகிறது. புதிய கேப்டன் புதிய பந்துவீச்சு படை புதிய ஆல் ரவுண்டர்கள் என முற்றிலும் புதிய அணியை ஆர்.சி.பி அணி களம் இறக்கி இருக்கிறது.
ருதுராஜ் என்ன செய்யனும்?
இதன் காரணமாக முதல் போட்டியில் பலம் வாய்ந்த கொல்கத்தா அணியை வீழ்த்தி 2 புள்ளிகளை ஆர் சி பி அணி பெற்றது மட்டும் அல்லாமல் பேட்டிங்கில் விரைவாக சேஸ் செய்தது. இந்த தருணத்தில் சிஎஸ்கே அணியில் இருக்கும் சுழற் பந்துவீச்சு படையை ஆர் சி பி அணி பேட்ஸ்மேன்கள் அபாரமாக எதிர்கொள்வார்களா என்று தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆர்சிபி அணி சமாளிக்க சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். சென்னையில் பனிப்பொழிவு தற்போது இரவு நேரத்தில் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக டாஸ் வென்ற பிறகு முதலில் பந்து வீசுவது சரியானதாக இருக்கும். மேலும் சிஎஸ்கே வின் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அணியில் இருக்கும் ஒட்டுமொத்த சுழற் பந்துவீச்சாளர்களையும் ருதுராஜ் பயன்படுத்த வேண்டும்.
பலவீனமாக இருக்கும் பேட்டிங்:
சிஎஸ்கே அணியில் இருக்கும் ரச்சின் ரவீந்திரா முதல் போட்டியில் பந்து வீசவில்லை. இதனால் இரண்டாவது போட்டியில் அவருக்கு இரண்டு ஓவர்கள் ஆவது வழங்க வேண்டும். இதைப் போன்று நாதன் எல்லீஸ், சாம்கரன் மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரை வைத்து சிஎஸ்கே அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பேட்டிங்கை பொறுத்த வரை சிஎஸ்கே அணி நடு வரிசை கொஞ்சம் பலவீனமாக காட்சியளிக்கின்றது.
இதையும் படிங்க : தோனி என்கிட்ட சொன்ன அதை சொல்ல மாட்டேன்.. தவான் பீட்டர்சன் எனக்கு ஹெல்ப் பண்றாங்க – அசுதோஷ் சர்மா பேட்டி
கடந்த போட்டியில் சொதப்பிய சிவம் துபே, தீபக் ஹூடா மற்றும் சாம்கரன் ஆகிய மூன்று வீரர்களில் ஏதேனும் ஒரு வீரராக இன்று பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் அல்லது ருதுராஜ் ஏதேனும் ஒரு வீரர் தொடர்ந்து இருவது ஓவர் வரை பேட்டிங் செய்ய வேண்டும். இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி புவனேஸ்வர் குமாரை களமிறக்க போகிறது. இது சிஎஸ்கேக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.இந்தப் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங், கோலி, ரஜத் பட்டிதார் ஆகியோரை கட்டுப்படுத்தினாலே சிஎஸ்கே வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






