நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேற்றி ஆச்சரியம் அளித்தார்.
இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ரோஹித் சர்மா டக் அவுட்
‘எல் கிளாசிகோ’ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய வந்த போது அந்த அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா வலது கை பவுலர் கலீல் அகமதுவின் பந்துவீச்சில் மூன்று பந்துகளை சந்தித்த பிறகு நான்காவது பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இது ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா இடது கை பந்துவீச்சாளருக்கு எதிராக 49வது தடவை ஆட்டம் இழக்கிறார். அதேபோல 18வது முறையாக டக் அவுட் ஆகி வெளியேறி மோசமான சாதனை படைத்தார். இந்த சூழ்நிலையில் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறி இருப்பது மும்பை அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கேன் வில்லியம்சன் அது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
வெறும் முதல் போட்டிதான்
இது குறித்து வில்லியம்சன் கூறும்போது “இது வெறும் முதல் போட்டிதான். வலது கை பவுலரான கலில் அகமது ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவதில் உண்மையான திறமை கொண்டவர். அது சென்னை அணிக்கு ஒரு சிறப்பான உத்வேகத்தை அளித்தது. ஆனால் அதே வேளையில் ரோகித் சர்மாவை பொருத்தவரை அவரது வாழ்க்கையில் ஏராளமான இடது கை பந்துவீச்சாளர்களை சந்தித்து இருக்கிறார். மேலும் அவர் சுதந்திரமாக விளையாட கூடிய ஒரு வீரர்.
இதையும் படிங்க:சச்சின் தன் மகனை வீணடிக்கிறார்.. என்கிட்ட 6 மாசம் விட்டா பெஸ்ட் பேட்ஸ்மேனா மாத்துவேன் – யோக்ராஜ் சிங் பேச்சு
எனவே இந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா எப்படி முன்னேறி செல்கிறார் என்பதை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். ஐபிஎல் தொடரை பொருத்தவரை சூழ்நிலைகளிலும் நிறைய பன்முகத்தன்மையை பார்க்கலாம். சென்னையில் பேட்ஸ்மேன் ஷிப் கடினமான கட்டங்களை கடந்து செல்வது மிகவும் முக்கியமானது. ஆனால் அதுவே மும்பை அணி அவர்களது சொந்த மைதானத்திற்கு திரும்பும் போது நிலைமை முற்றிலும் வேறு விதமானதாக இருக்கும். ரோஹித் மற்றும் அவரது அணியின் விளையாட்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு மும்பை மைதானத்தில் மாறுவார்கள்” என்று பேசி இருக்கிறார்.






