தோனியின் பவர் ஹிட்டிங் சிக்ஸ்க்கு காரணமே அதான்.. யாரும் கவனிக்காத ரகசியத்தை சொல்றேன் – ரெய்னா உடைக்கும் சீக்ரெட்

0
57

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் மகேந்திரசிங் தோனி குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடி பல போட்டிகளை வென்ற கொடுத்துள்ள சுரேஷ் ரெய்னா மகேந்திர சிங் தோனியின் நம்பிக்கையான வீரர்களின் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் இவர்கள் இருவரும் பலமுறை போட்டியை வென்று கொடுத்திருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பாக ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி குறித்தும், அவரது ஆர்வம் குறித்தும் ஐபிஎல் தொடருக்கு தாங்கள் எப்படி தயாராவோம் என்பது குறித்தும் ரெய்னா சில சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். ஐபிஎல் தொடர் தொடங்க ஒரு மாதத்திற்கு முன்பாகவே அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு பயிற்சியைத் தொடங்குவோம் என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ரெய்னா கூறும்போது “நான் உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்கிறேன். தோனியை பற்றி எப்போதும் அவரது விக்கெட் கீப்பிங், திறமை, கேப்டன்ஷிப், உடல் தகுதி இதைப் பற்றி மட்டும் தான் பேசுகிறார்கள். ஆனால் தோனி தனது பேட்டில் இருந்து சிக்ஸர் அடிக்க எவ்வளவு சக்தியை உருவாக்குகிறார் என்று பலர் கவனித்ததில்லை. சீசனுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக சிஎஸ்கே கேம்பில் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள அவர் எப்போதும் வலியுறுத்துவார். இந்தியா மற்றும் சென்னை அணிக்கு விளையாடுவதற்காக ஐபிஎல் சூட்டிங் ரத்து செய்துவிட்டு நாங்கள் பயிற்சிக்கு கிளம்புவோம். ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் பயிற்சி செய்வோம்.

இதையும் படிங்க:இவர் இன்னும் மாறல.. பும்ராவால் என்னை எதுவும் செய்ய முடியாது.. அவரின் விஷயம் எனக்கு தெரியும் – பென் டக்கட்

வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொள்வோம். பின்னர் மீதமுள்ள இரண்டு நாட்கள் போட்டியை அணுகுவது குறித்து விவாதிப்போம். அந்த கரடு முரடான ஆடுகளங்களில் சுழற் பந்துவீச்சாளர்களை விளையாடுவோம். கடந்த ஆண்டு அவர் பல சிக்சர்கள் அடித்தார். இப்போது அவர் மிக வலிமையானவராக தெரிகிறார். சென்னை அணி இப்போது மிகவும் வலுவாக இருக்கிறது. எனவே இந்த ஆண்டும் தோனியின் பல ஹெலிகாப்டரை பார்க்கலாம்” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -