பிசிசிஐ எங்க புரூக்கை தண்டித்தது சரிதான்.. அவரால இவ்வளவு பிரச்சனை உண்டாகி இருக்கு – மொயின் அலி ஆதரவு

0
439
Brook

ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இங்கிலாந்தின் ஹாரி புரூக்குக்கு பிசிசிஐ தடை விதித்தது நியாயமான நடவடிக்கை என இங்கிலாந்து வீரர் மொயின் அலி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இந்த முறை பிசிசிஐ மெகா ஏலத்தில் பெயர் கொடுக்காதவர்களை மினி ஏலத்தில் கலந்து கொள்ள தடை விதித்தது. மேலும் மெகா ஏலத்தில் பெயர் கொடுத்துவிட்டு சரியான காரணம் இல்லாமல் தொடரில் இருந்து விலகுபவர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் விளையாடவும் தடை என அறிவித்தது.

- Advertisement -

ஹாரி புரூக் விதிக்கப்பட்ட தடை

இந்த நிலையில் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்தார். இதனால் பிசிசிஐ புதிய விதியின்படி அவரை அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதபடி தடை விதித்து விட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மொயின் அலி “பிசிசிஐ கொடுத்திருக்கும் இந்த தண்டனை கடுமையானது கிடையாது. ஒரு விதத்தில் நான் சரி என ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் இப்படி நிறைய பேர் செய்கிறார்கள், ஏற்கனவே செய்தும் இருக்கிறார்கள். மெகா ஏலத்திற்கு வராமல் மீண்டும் மினி ஏலத்திற்கு வந்து கொஞ்சம் பெரிய அளவில் பணம் கூடுதலாக பெறுகிறார்கள். இப்படி இல்லாமல் எதுவாக இருந்தாலும் ஹாரி புரூக் ஒரே நேரத்தில் பல விஷயங்களை குழப்புகிறார்”

- Advertisement -

இந்த தண்டனை நியாயமானது

“ஹாரி புரூக்கை இழக்கும் எந்த அணியும் திடீரென குழப்பம் அடைகிறது. இப்பொழுது அந்த அணி எல்லாவற்றையும் சீரமைக்க வேண்டும். நீங்கள் காயம் அல்லது குடும்ப காரணம் இல்லாமல் தனிப்பட்ட வேறு காரணங்களுக்காக வெளியேறினால் உங்களுக்கு தடை விதிக்கப்படும் என்பது விதியாக இருக்கிறது. இப்படி நீங்கள் வெளியேறும் பொழுது அது ஒரு அணியை பாதிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : சிஎஸ்கேவின் அதிர்ஷ்ட நட்சத்திர இந்திய வீரர்.. லக்னோ அணியில் இணைகிறாரா?.. புகைப்படத்தால் ஏற்பட்ட பரபரப்பு

இது குறித்து ஆதில் ரஷீத் கூறும்பொழுது “முதலில் பிசிசிஐ இந்த விதியை கொண்டு வந்து விட்டது. பிறகு தான் அவரை தடை செய்யும் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. எனவே நீங்கள் ஏலத்தில் பெயரைக் கொடுத்து உங்களை ஒரு அணி வாங்கிய பிறகு வெளியே சென்றால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும். இதன் விளைவு உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் இதை நான் கடுமையானதாக நினைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -