தோனி ஏன் வெற்றிகரமான கேப்டன் என்று சொல்ல.. இந்த ஒரு விஷயம் போதும் – சிஎஸ்கே முன்னாள் வீரர் உணர்ச்சி பேட்டி

0
85

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்க உள்ளது.

இந்த சூழ்நிலையில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து விளையாடிய முன்னாள் சிஎஸ்கே வீரர் சுதீப் தியாகி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி திகழ்ந்தார். 2010 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக 2023 ஆம் ஆண்டு தோனி தலைமையில் ஐந்தாவது கோப்பையை வெற்றி பெற்று அதோடு தனது கேப்டன் பகுதியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இந்த சூழ்நிலையில் அவரோடு 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் விளையாடிய சுதீப் தியாகி 2010 ஆம் ஆண்டு சென்னை அணி முதல் பட்டத்தை கைப்பற்றிய போது அந்த அணிக்காக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் தோனி எப்படிப்பட்ட கேப்டன் எனவும், அவர் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்களை எவ்வாறு வழிநடத்துகிறார் எனவும், சென்னை அணி இவ்வளவு வெற்றிகரமாக இருப்பதற்கு காரணம் என்ன எனவும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம் எஸ் தோனி முதல் முதலாக சந்தித்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன். அப்போது அவர் அவ்வளவு புகழ்பெற்ற வீரர் என்று எனக்கு தோன்றவில்லை. அவர் சீனியர் ஜூனியர் என யாரையும் பாரபட்சம் இன்றி சமமாக நடத்துகிறார். தோனி எப்போதும் களத்தில் அனைவருக்கும் ஒரு மந்திரத்தை வைத்திருப்பார். அதாவது விளையாடும் போது உங்களால் முடிந்த 100% அனைத்தையும் கொடுங்கள் என்று கூறுவார்.

இதையும் படிங்க:ரோகித் யாரிடமும் கேட்டு இந்த முடிவை எடுக்க மாட்டார்.. அவரை எனக்கு நல்லா தெரியும் – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

அவர் எனக்கு மற்றும் சென்னை அணிக்கு நிறைய ஆதரவு அளித்துள்ளார். அதனால் தான் சென்னை அணி இவ்வளவு வெற்றிகரமாக உள்ளது. அவர் எங்களிடம் என்ன சொன்னாலும் நாங்கள் அதை செய்வோம் நாங்கள் சொன்னாலும், அதை தோனி கேட்டுக் கொள்வார். அதனால்தான் இவர் ஏன் அவ்வளவு வெற்றிகரமான கேப்டன் என்று காட்டுகிறது. இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் கீழ் விளையாடி இருக்கிறேன். அவர் பாரபட்சம் இன்றி அனைவரையும் சமமாக நடத்தும் ஒரு கேப்டன்”என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -