இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் தற்போது டி20 அணியின் நிரந்தர தொடக்க வீரராக திகழ்கிறார்.
இந்த சூழ்நிலையில் இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ள நிலையில் சாம்சன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சஞ்சு சாம்சன் வருத்தம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் தலைமையில் சிறப்பான வெற்றிகளை பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறா விட்டாலும் லீக் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வெற்றிகள் பெற்று நிறைய பொழுதுபோக்கு அம்சங்களை ரசிகர்களுக்கு வழங்குகிறது. இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணியோடு 2018 ஆம் ஆண்டு முதல் 24 ஆம் ஆண்டு வரை பயணித்த ஜாஸ் பட்லர் இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
ராஜஸ்தான் அணி ஏற்கனவே 5 வீரர்களை தக்க வைத்திருந்த நிலையில், பட்லரை அந்த அணியால் தக்க வைக்க முடியாமல் போனது. இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் நானும் பட்லரும் ஏழு வருடம் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம் எனவும், அவர் ஒருவர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனவும், அவரை அணியில் தக்க வைக்க முடியாமல் போனது வருத்தமாக இருப்பதாக சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஐபிஎல்லில் இந்த விதியை மாற்றுவேன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஜாஸ் பட்லர் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஏழு வருடங்களாக ஒன்றாக விளையாடி நீண்ட பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இருக்கிறோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிவோம் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம். அவர் எனக்கு ஒரு மூத்த சகோதரர் போன்றவர், நான் கேப்டனாக இருந்தபோது ஒரு துணை கேப்டனாக அவர் அணிக்கு பெரிய பங்களிப்புகளை வழங்கி இருக்கிறார். அவரை விடுவிப்பது எனக்கு சவாலான விஷயங்களில் ஒன்றாகும்.
இதையும் படிங்க:ஐபிஎல் நேரத்தில்.. கம்பீர் செய்யும் யாரும் செய்யாத காரியம்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.. வெளியான தகவல்
இங்கிலாந்து தொடரில் நாங்கள் விளையாடிய போது கூட இரவு உணவு விருந்தில் இது குறித்து பட்லரிடம் பேசினேன். ஐபிஎல்லில் ஒரு விஷயத்தை என்னால் மாற்ற முடியும் என்றால் அது வீரர்களை விடுவிக்கும் விதியை மாற்றுவேன். இது நேர்மையான அம்சங்களை பெற்றிருந்தாலும் தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட தொடர்புகளையும், இணைப்புகளையும் விடுவிக்க வேண்டிய நிலைமை உருவாகிறது” என்று சாம்சன் வருத்தத்தோடு பேசி இருக்கிறார்.






