விராட் கோலியை இப்படி விமர்சனம் செய்யலாமா.? இதைப் பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை – ரோகன் கவாஸ்கர் பதிலடி

0
110

இந்தியா கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றி பெற்று விட்டு புகழின் உச்சியில் இருக்கிறது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ஒரு காரணமாக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோகன் கவாஸ்கர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி மீது விமர்சனம்

சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி அதற்குப் பிறகு நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்து பெரிய விமர்சனத்திற்கு உள்ளானார். அப்போது இந்திய முன்னாள் வீரர்களே விராட் கோலி ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது எனவும், அவருக்கு 36 வயதாவதால் அவரது ஆட்ட திறன் இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைகிறது எனவும் கூறியிருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் விராட் கோலி பதில் அளிக்கும் விதமாக, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளில் அணிக்கு தூணாக நின்று வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். மேலும் விராட் கோலி தனக்கு இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை எனவும், அதைப் பற்றி தான் சிந்திக்கவே இல்லை எனவும் ஓய்வு குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி குறித்து ரோகன் கவாஸ்கர் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவரைப் பற்றி பேசவே கூடாது

இதுகுறித்து ரோகன் கவாஸ்கர் கூறும்போது ” விராட் கோலியின் உடல் தகுதியை மறந்து விடுங்கள், அவரது பேட்டிங் திறன் விராட் கோலியின் பார்ம் மற்றும் அவர் எடுக்கும் ரன்கள் ஆகியவற்றைப் பற்றி பேசவே கூடாது. அவர் இதுவரை விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவர், எனவே அவரைப் பற்றி நாம் ஏன் விவாதிக்க முயற்சிக்க வேண்டும்? நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாடும் போது உங்கள் வயது 12, 13, 14 ஆக இருந்தாலும் சரி அல்லது 40,42, 43 ஆக இருந்தாலும் சரி அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தக் கூடாது.

இதையும் படிங்க:பும்ரா கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்துரும்.. பிசிசிஐ இந்த ரிஸ்க் எடுக்காதீங்க – நியூசி ஷேன் பாண்ட் எச்சரிக்கை

நீங்கள் சிறந்த 15 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்கிறீர்கள். அது சிறந்த 11 அல்லது 15 வீரர்களாக இருந்தாலும் சரி. நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடுவதற்காக வயதை பொருட்படுத்தாமல் சிறந்த வீரர்களை தேர்வு செய்கிறீர்கள். உங்களுக்கு சிறந்த வீரர்கள் வேண்டும்” என்று ரோகன் கவாஸ்கர் கூறி முடித்திருக்கிறார். அதாவது விராட் கோலி இன்னமும் பேட்டிங்கில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும்போது அவரது வயது மற்றும் பேட்டிங் திறன்கள் போன்ற விஷயங்களைப் பற்றி பேசவே கூடாது என்று ரோகன் பிரசன்னா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

- Advertisement -