எங்க டீம்ல அவருக்கு மன உறுதி ஜாஸ்தி.. எதைக் கண்டும் பயப்பட மாட்டாரு – ரோஹித் சர்மா புகழாரம்

0
1591

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெற்றி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி சாம்பியன்

இந்த போட்டியிலும் ரோஹித் சர்மா டாசை இழந்த நிலையில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ரச்சின் ரவீந்தரா ஓரளவு அதிரடியாக ஆடிவிட்டு வெளியேற அதற்கு பின்னால் வந்த நியூசிலாந்து வீரர்கள் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்கள். இதனால் இந்திய அணிக்கு நியூசிலாந்து அணி வெற்றி இலக்காக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது. அணியில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் டேரில் மிச்சல் 63 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாட வழக்கம் போல ரோகித் சர்மா அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த முறை ஓரளவு நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 83 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 76 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்தது.

- Advertisement -

கேப்டன் ரோஹித் பேட்டி

இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா பேசும்போது ” எங்களுக்கு ஆதரவு அளித்த எங்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வந்த ரசிகர் கூட்டம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. இது எங்களது சொந்த மைதானம் இல்லை என்றாலும் அதை ரசிகர்கள் சொந்த மைதானமாக மாற்றினார்கள். இது மிகவும் திருப்தியான வெற்றியாக இருக்கிறது. எங்கள் சுழற் பந்து வீச்சு மீது ஆரம்பத்தில் இருந்து அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் ஒரு போதும் ஏமாற்றவில்லை. அதை எங்கள் அணி நன்றாக பயன்படுத்திக் கொண்டது.

இதையும் படிங்க:இந்திய அணியின் எதிர்காலம்.. இனி இவங்க கையிலதான்.. அதனாலதான் இதுக்கு ட்ரை பண்றேன் – விராட் கோலி

எங்கள் பந்துவீச்சில் நாங்கள் சீராக இருந்தோம், கே எல் ராகுல் எப்போதுமே உறுதியான மனம் கொண்டவர். அவரைச் சுற்றியுள்ள அழுத்தத்தைக் கண்டு ஒருபோதும் அவர் பயப்பட மாட்டார். அவர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார் அந்த சூழ்நிலையில் ஆட்டத்தை சிறப்பாக முடிக்க சரியான ஷாட் தேர்வு செய்து விளையாடினார். இது மீதமுள்ள பேட்டர்களை சுதந்திரமாக விளையாட அனுபவித்தது. ஹர்திக் உள்ளிட்ட மொத்த பேட்டிங் யூனிட் சிறப்பாக விளையாடியது. வருண் சக்கரவர்த்தியிடம் ஏதோ வித்தியாசமான ஒன்று உள்ளது. அதைப் பெற நீங்கள் விரும்புவீர்கள். அவர் பந்துவீச்சு தொடங்கவில்லை என்றாலும் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்குள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்று ரோகித் சர்மா முடித்தார்.

- Advertisement -