விராட் கோலி பத்தி உத்தப்பா சொன்னது உண்ம இல்லை.. 2019 உலகக்கோப்பை நடந்தது இதுதான் – அம்பதி ராயுடு விளக்கம்

0
122
Ambati

இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு தான் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு அப்போதைய கேப்டன் விராட் கோலி மட்டுமே காரணம் கிடையாது என தெளிவுபடுத்தி இருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி தோல்விக்கு அம்பதி ராயுடுவை அணியில் சேர்க்காதது மிக முக்கிய காரணம் என இன்று வரை பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இறுதி நேரத்தில் அவரை கழட்டி விட்டு விஜய் சங்கரை இந்தியத் தேர்வுக்குழு அணியில் சேர்த்தது பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

- Advertisement -

ராபின் உத்தப்பா வைத்த குற்றச்சாட்டு

இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசியிருந்தபொழுது “விராட் கோலிக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால், அவர் அவர்களை சரியாக உணரவில்லை என்றால் அவர்கள் உடனடியாக அணியில் இருந்து வெட்டப்பட்டார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அம்பதி ராயுடு. இங்கு ஒவ்வொருவருக்கும் விருப்ப தேர்வுகள் இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்த விஷயம் மிகவும் மோசமான ஒன்று”

“நீங்கள் ஒரு வீரரை உலகக்கோப்பை அணிக்கு உச்ச நிலைக்கு எடுத்துச் சென்ற பிறகு அவரை நீங்கள் கழட்டி விட முடியாது. அவர் தனது வீட்டில் உலகக்கோப்பை ஜெர்சி மற்றும் கிட் பேக்கை வைத்திருந்தார். அவர் தான் விளையாடப் போகிறோம் என்று நினைத்து இருப்பார். அந்த நேரத்தில் நீங்கள் கதவுகளை மூடி இருக்கிறீர்கள். என்னை பொறுத்தவரையில் கொஞ்சமும் நியாயமானது கிடையாது” எனக் கூறியிருந்தார்.

- Advertisement -

அம்பதி ராயுடு தந்த விளக்கம்

இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “விராட் கோலிக்கு விருப்பு வெறுப்புகள் அதிகம் என்று உத்தப்பா சொல்ல முயன்றார். ஆனால் என்னை அதிகம் ஆதரித்தது விராட் கோலிதான். அவர் என்னை விரும்பினார். அவர் கேப்டனாக இருந்த பொழுது நாங்கள் பல போட்டிகளில் ஒன்றாக விளையாடினோம். அவர் என்னுடைய போராட்டத்தை புரிந்து கொண்டார். அவரும் என்னைப் போலவே தாழ்மையான நிலையில் இருந்து மேலே வந்தவர். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் வெளிப்படுத்திய ஆட்டம் சாதாரணமானது கிடையாது”

இதையும் படிங்க : நியூசி அணியின் திட்டம் பலவீனம்.. ரகசியத்தை உடைத்த இந்திய நெட் பவுலர்.. செம டிவிஸ்ட்

“அவருடைய கேப்டன்சி சில சமயங்களில் தேவையற்றதாக இருந்தது. உத்தப்பா கூற முயன்றது என்னவென்றால் அவர் கேப்டன்ஷியில் விருப்பு வெறுப்பு பார்த்தார் என்பது. இது விருப்பங்களை பற்றியது கிடையாது தர்க்கத்தை பற்றியது. இது அந்த நேரத்தில் சரியானது கிடையாது. அப்போது என்னை நீக்க எடுத்த முடிவு விராட் கோலி, ரவி சாஸ்திரி, எம்எஸ்கே பிரசாத் ஆகியோரில் யாரோ ஒருவர் எடுத்த முடிவு கிடையாது. அது ஒரு குழுவாக சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு. இதில் நான் தனி ஒருவரை குற்றம் சாட்ட விரும்பவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -