சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுவது தான் தற்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் தற்போது இறுதி போட்டிக்கு சென்றுள்ளது.
இதனை குறிப்பிட்டு பல விமர்சகர்களும் இந்தியாவுக்கு சாதகமாக அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கம்பீர்,ரோகித் சர்மா ஆகியோர் துபாய் தங்களுடைய சொந்த நாடு கிடையாது என்றும் தங்களுக்கும் பாதகமான ஆடுகளம் தான் வழங்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.
உண்மையை சொன்ன முகமது ஷமி:
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான சமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,”தொடர்ந்து ஒரே மைதானத்தில் விளையாடுவதால் ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது. கள சூழல் மற்றும் வானிலை என அனைத்துமே எங்களுக்கு பழகி இருக்கிறது.”
“உதாரணத்திற்கு அரையிறுதி போட்டியில் கொஞ்சம் குளிர் இருந்தது. எனவே அதற்கு ஏற்றார் போல் நாங்கள் எங்களை தயார் படுத்திக் கொண்டோம். ஒரே மைதானத்தில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது என்பது நிச்சயம் சாதகமான விஷயம் தான். ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் பயிற்சி செய்ய வேண்டும்.”
கேப்டன் எதிர்பார்ப்பதை செய்கிறேன்:
“நான் எப்போதுமே போட்டியில் எப்படி பந்து வீசப் போகிறோமோ, அதே போல் தான் வலை பயிற்சியும் பந்து வீசுவேன். என்னுடைய திட்டத்தை நான் எப்போதுமே சிம்பிளாக வைத்துக் கொள்வேன். என்னுடைய பணியை நான் சிறப்பாக செய்து வருகின்றேன். கேப்டன் எப்போதுமே ஒரு பவுலரிடமிருந்து விக்கெட்டை தான் எதிர்பார்ப்பார்.”
இதையும் படிங்க: ஒரு இன்னிங்ஸ் சரியா ஆடலனாலும், தூக்கி போட்டுருவாங்க.. 32வது வயது இந்திய வீரர் குறித்து கும்ப்ளே கருத்து
“எனவே அதுதான் என்னுடைய பொறுப்பு. சரியான இடத்தில் பந்து வீசி விக்கெட் எடுக்க வேண்டும் எங்கள் அணியில் போதுமான அளவுக்கு வீரர்களிடம் அனுபவம் இருக்கின்றது. போட்டியில் முடிவுகளே, எங்கள் வீரர்களின் திறன் பற்றி சொல்லிவிடும். ஒரு நாள், டி20 கிரிக்கெட் பொறுத்தவரை நீங்கள் பெரிய அளவு யோசிக்க வேண்டியது இல்லை. ஆனால் 30, 35 ஓவர் கழித்து நீங்கள் சில மாற்றங்களை பந்து வீச்சில் செய்ய வேண்டும்” என்று சமி கூறியுள்ளார் இந்திய அணி வரும் ஒன்பதாம் தேதி இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.






