விராட் கோலி மனசுல அந்த விஷயம் மட்டும் இல்லனா.. இவ்ளோ பெரிய ஜாம்பவானா வந்திருக்கவே முடியாது – சுனில் கவாஸ்கர் புகழாரம்

0
20

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடி மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விராட் கோலி குறித்து புகழாரம் சூட்டி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் கடந்து மிகப்பெரிய சாதனை படைத்த நிலையில், தற்போது சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதன் மூலமாக தனது 300 வது ஒரு நாள் போட்டியில் விளையாடி மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். மேலும் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் 300 போட்டிகள் விளையாடும்7வது இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விராட் கோலியை மனதாரப் பாராட்டி பேசி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது “விராட் கோலி மாணவரிடம் இருந்து ஆசிரியராக மாறி நான் சேர்த்தால் இந்திய கிரிக்கெட் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உயர்ந்துள்ளார். ஷுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்ஸ் போன்ற இளைய வீரர்களுக்கு விராட் கோலியுடன் அருகில் அமர்ந்து அவர் எப்படி தயாராகிறார் என்பதை கற்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இது உள்ளது.

- Advertisement -

ஒரு போதும் திருப்தி அடைவதில்லை

கிரிக்கெட் களத்தில் ரன்கள் எடுப்பது மட்டுமல்ல, எதிர் அணியிடமிருந்து ரன்களை தடுக்க அவர் எப்படி டைவ் செய்கிறார், பந்தை விக்கெட் கீப்பர் அல்லது பந்துவீச்சாளரிடமிருந்து எப்படி திருப்பி அனுப்புகிறார், தனது அணிக்காக ரன்களை சேமிக்க எப்படி முயற்சிக்கிறார் என்பதை பாருங்கள். இந்தியா மீதான அந்த முழு மனதுடன் கூடிய அர்ப்பணிப்பு என்பது மிக முக்கியமானது. அதனால்தான் அவர் கற்றவராக இருந்து ஒரு கிரிக்கெட் பேராசிரியராக பரிணமித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாபர் அசாம் முன்னாடி விராட் கோலி ஒரு பூஜ்ஜியம்.. அந்த வேலையை செய்யாதிங்க – பாக் முன்னாள் கோச் பேட்டி

நேற்றையதை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற ஆசைதான் அவரை சிறப்பாக செயல்பட தூண்டுகிறது என்று நான் நினைக்கிறேன். அவர் சாதித்ததில் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. இந்திய அணிக்காக மேலும் சிறப்பாக செயல்பட விரும்புகிறார். இந்தியாவுக்காக விளையாடுவதில் அவர் காட்டும் பெருமை மரியாதை மற்றும் ஒரு பாக்கியம் ஆகும். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று மில்லியன் கணக்கானவர்கள் கனவு காண்கிறார்கள். மூன்று வடிவ கிரிக்கெட்டில் எதுவாக இருந்தாலும் சரி, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு குழந்தையின் கனவாகும். ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறந்து விளங்கும் கோலிக்கு அந்த லட்சியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது கனவாகும்” என்று கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -