10 வருஷத்துல ஆப்கான் உலகக் கோப்பையை ஜெயிப்பீங்க.. ஆனா நான் சொல்ற இத செய்யுங்க – டேல் ஸ்டைய்ன் அறிவுரை

0
153
Steyn

ஆப்கானிஸ்தான் அணி அடுத்த 10 வருடத்தில் உலக கோப்பையை கைப்பற்ற முடியும் என்றும் அதற்கு மிக முக்கியமாக ஒரு விஷயத்தை அவர்கள் செய்ய வேண்டும் என்றும் தென் ஆப்பிரிக்க லெஜெண்ட் டேல் ஸ்டெய்ன் அறிவுரை கூறியிருக்கிறார்.

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணியை வென்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டிரா செய்தும் சிறப்பாகவே செயல்பட்டது. இறந்த போதும் நல்ல ரன் ரேட் இல்லாத காரணத்தினால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை எட்டுவது 99% முடிவுக்கு வந்துவிட்டது.

- Advertisement -

இந்த விஷயம் தேவை

இதுகுறித்து டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது ” முன்பெல்லாம் வீரர்கள் தங்களுடைய திறமை மற்றும் பொறுமையை மேம்படுத்துவதற்காக கவுண்டி கிரிக்கெட் விளையாடுவதற்கும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுவதற்கும் செல்வார்கள். ஆனால் இன்றைய வேகமான உலகத்தில் பொறுமை மிகவும் குறைவாக இருக்கிறது. சமூக வலைதளத்தில் கூட இரண்டு நிமிட வீடியோவை பார்க்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தான் வீரர்களும் பொறுமை இல்லாமல் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்”

“ஆப்கானிஸ்தான் வீரர்கள் பொறுமை இல்லாமல் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஒரு பந்துக்கு ஒரு விக்கெட் எடுக்க வேண்டும் என்று வேகமாக இருக்கிறார்கள். விக்கெட் எடுக்க அவர்கள் பொறுமை காட்டுவது கிடையாது. சில சமயம் பேட்டர்கள் ஒரே மாதிரி இருக்கிறார்கள். அவர்கள் முதல் ஓவரிலேயே சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்”

- Advertisement -

பத்து வருடத்தில் உலகக் கோப்பையை வெல்லலாம்

“ஆப்கானிஸ்தான் வீரர்கள் உலகெங்கும் டி20 லீக்குகளில் விளையாடுகிறார்கள். இது அவர்களுக்கு சிறப்பானதாகவே அமைந்திருக்கிறது. இருந்தபோதிலும் நான்கு நாட்கள் கொண்ட கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும். ஏனென்றால் அடிப்படையில் ஒரு நாள் கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டின் சுருங்கிய வடிவமாகத்தான் இருக்கிறது”

இதையும் படிங்க : கிரிக்கெட் கடவுள் சச்சினை விட.. விராட் கோலி தான் இந்த விஷயத்துல பெஸ்ட் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து

“ஆப்கானிஸ்தான் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய விஷயங்களில் ஒன்று பொறுமையாகும். இதை மட்டும் அவர்கள் கற்றுக்கொண்டு விட்டால் நிச்சயம் அடுத்த 10 ஆண்டுகளில் ஐசிசி தொடரை ஆப்கானிஸ்தான் அணியால் வெல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -