AUS vs SA: மழையால் போட்டி ரத்து.. இனி செமி பைனல் போக யாருக்கு வாய்ப்பு.? ஆஃப்கானிஸ்தானுக்கு உதவிய மழை

0
960

சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் வெளியேறிவிட்டன. இந்த சூழலில் ராவம்பிண்டி மைதானத்தில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவிருந்தது.

ஆனால் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், சரியான நேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. இரவு 7 மணி வரை காத்திருந்த நடுவர்கள், பின்னர் மைதானத்தின் நிலை மற்றும் மழைக் காரணமாக ஆட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர். மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனால் தென்னாப்பிரிக்கா அணி குரூப் ஏ பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி 3 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இரண்டும் தலா ஒரு தோல்விகளுடன் 0 புள்ளிகளுடன் 3 மற்றும் 4 ஆகிய இடங்களில் இருக்கின்றனர்.

4 அணிகளுக்கும் வாய்ப்பு

தற்போது ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 4 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தலா 2 போட்டிகள் விளையாட உள்ளது. 

- Advertisement -

அந்த 2 போட்டிகளில் வெற்றிபெற்றால், எளிதாக 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும். அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியும் அடுத்தவொரு ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும். அந்த வெற்றியை பெற்றாலே எளிதாக 5 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

விளையாடும் மழை

ஆஸ்திரேலியா அணி அடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணியுடன், தென்னாப்பிரிக்கா அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் எந்த அணி தோல்வியை சந்திக்கிறதோ, அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வரும் என்று கருதலாம். இருந்தாலும் கடைசி லீக் போட்டி வரை எந்த அணி அரையிறுதிக்கு செல்கிறது என்பதை உறுதி செய்ய முடியாது.

ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை எதிர்த்து விளையாடவுள்ளது. மேலும் ஒவ்வொரு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மழையால் பாதிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மழைக் காரணமாக ஆஸ்திரேலியா வெளியேறியது யாராலும் மறக்க முடியாது.

- Advertisement -