பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய ஜாம்பவான் ஆட்டக்காரர் விராட் கோலி சதம் அடித்து இந்திய அணியை அபாரமாக வெற்றி பெற வைத்தார்.
இந்த சூழ்நிலையில் அவரது சிறு வயது கோச் ராஜ்குமார் சர்மா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய அணி அபார வெற்றி
இந்திய அணிக்கு எதிராக முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி வெற்றி இலக்காக இந்திய அணிக்கு 241 ரன்கள் நிர்ணித்தது. அதற்குப் பிறகு எதிர்கொண்டு விளையாடிய இந்திய அணியில் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓரளவு நல்ல பங்களிப்பை வெளிப்படுத்தி செல்ல அதற்குப் பின்னர் களம் இறங்கிய விராட் கோலி சுமையை தன் மீது ஏற்றிக் கொண்டார். எப்போதுமே பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய எதிரியான விராட் கோலி இந்த முறையும் அதனை நிரூபிக்க தவறவில்லை.
சிறப்பாக விளையாடி சதம் அடித்து தனது 82 ஆவது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். அது மட்டுமில்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 14,000 ரன்கள் குவித்து 300க்கும் குறைவான போட்டிகளில் இந்த சாதனை படைத்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாறையும் படைத்தார். இதில் சச்சின் டெண்டுல்கர் 300க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய போது தான் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா இது குறித்து சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
நான் சொல்வது இதைத்தான்
இது குறித்து அவர் விரிவாக பேசும் போது ” இப்போது நீங்கள் விராட் கோலி ஃபார்மில் இல்லை என்று பேச முடியாது. நான் எப்போதும் சொல்வது போல விராட் கோலி ஒரு பெரிய போட்டி வீரராக இருந்து வருகிறார். இன்று மீண்டும் ஒருமுறை அவர் அதைத்தான் நிரூபித்திருக்கிறார். கடுமையான எதிரணிக்கு எதிராக விராட் கோலி எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக நாட்டுக்காக விராட் கோலி இதை செய்து வருகிறார். நாட்டுக்காக அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற வீரராகவும் இருக்கிறார்.
இதையும் படிங்க:இந்திய வீரர்கள் பிரச்சனைல மாட்டாத வரை.. பிசிசிஐ போட்ட இந்த ரூல் தப்பில்ல – ஷிகார் தவான் பேட்டி
51 வது ஒரு நாள் மற்றும் 82 ஆவது சதத்தை தவிர, ஒரு நாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் குவித்திருக்கிறார். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும், அவர் முழு நாட்டையும் பெருமைப்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியை கொடுத்ததில் நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம்” என்று ராஜ்குமார் சர்மா பேசியிருக்கிறார். விராட் கோலி இறுதியாக 100 ரன்கள் அடிக்க இந்திய அணி 244 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை ஆரம்பிக்கட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.






