இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியின் மூலமாக சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரின் ஐந்தாவது கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை ஓரளவு எதிர்கொண்டு 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் குவித்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் குல்தீப் யாதவ் ஒன்பது ஓவர்கள் பந்துவீசி 40 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு வெற்றிய இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி விளையாடி வருகிறது. இதில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரோஹித் சர்மா 36 பந்துகளில் 41 ரன்கள் அடித்து விட்டு வெளியேறினார். இந்த சூழ்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடக்க இடத்தில் களம் இறங்கி 20 ரன்கள் எடுத்ததன் மூலமாக இந்திய அணியின் ஜாம்பவான் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் மெகா சாதனையை முறியடித்திருக்கிறார்.
ரோஹித் சர்மா படைத்த சாதனை
ரோகித் சர்மா இந்த போட்டியில் முதல் 20 ரன்கள் எடுத்து தொடக்க ஆட்டக்காரராக குறைந்த போட்டிகளில் விளையாடி 9000 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரராக சச்சின் டெண்டுல்கர் 197 இன்னிங்ஸ்கள் விளையாடி 9000 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் ரோஹித் சர்மா 181 இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடி 9000 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
இதையும் படிங்க:குல்தீப்க்கு பதிலா.. விராட் கோலி அங்க இருந்திருந்தா.. கதையே வேற.. பாக் போட்டி குறித்து சுனில் கவாஸ்கர்
15 பந்துகளை எதிர் கொண்ட ரோகித் சர்மா 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். மேலும் ஒரு நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி 9000 ரன்கள் கடந்த 6வது வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். தற்போது இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.






