தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு பழைய பாகிஸ்தான் அணி போல ஒரு திறமை இல்லை எனவும் அது அதன் தகுதியை இழந்து விட்டது எனவும் இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இன்று ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் முக்கியமான போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக பேசிய இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே இவ்வாறு கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் மையப் பிரச்சனை
பாகிஸ்தான் வெள்ளைப் பந்து அணிக்கு சரியான சுழல் பந்துவீச்சாளர் இல்லை என்ற பிரச்சினை இருந்து வந்தது. தற்போது அப்ரார் அகமது சிறப்பான முறையில் பந்து வீசுகின்ற காரணத்தினால் அந்தக் குறை தேர்ந்தெடுக்கிறது. மேலும் வழக்கம்போல் வேகப்பந்து வீச்சு சிறப்பாகவே இருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் என சீனியர் பேட்ஸ்மேன்கள் பிரச்சனையாக மாறி இருக்கிறார்கள். அவர்கள் தேவைப்படும் ரன் ரேட்டுக்கு வேகமாக விளையாடாமல் மந்தமாக விளையாடுகிறார்கள். இது பாகிஸ்தான் அணிக்கு பெரிய பிரச்சினையாக தற்பொழுது உருமாறி இருக்கிறது.
பாகிஸ்தான் அணி இந்தியாவை எப்படி பார்க்கும்?
இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கூறும் பொழுது ” தற்போது இருக்கும் பாகிஸ்தான் அணி பேட்டிங் வரிசை அச்சமூட்டக்கூடியதாக கிடையாது. அது அந்த தரத்தை இழந்து விட்டதாக நான் கருதுகிறேன். முன்பு பயமுறுத்தும் அளவுக்கு இல்லை என்றால் கூட, பொதுவாக இந்திய பந்துவீச்சுக்கு சவால் கொடுக்கக்கூடிய அளவுக்கு பாகிஸ்தான் பேட்டிங் வரிசை இருந்தது”
இதையும் படிங்க : இங்கிலாந்துல பிறந்து இங்கிலாந்தையே செஞ்சிட்டாரு.. எங்க இங்லிஷ் பாஸ்போர்ட்ட பத்தி தெரியல – ஸ்மித் பேட்டி
“இப்போது அது நேர்மாறானதாக மாறி இருக்கிறது. இந்திய பந்து வீச்சு யூனிட்டை அச்சுறுத்தக் கூடிய வகையில் பாகிஸ்தான் பேட்டிங் வரிசை கிடையாது. இப்படி பாகிஸ்தான அணி இந்தியாவை எப்படி பார்க்கும்? என்கின்ற கண்ணோட்டம் எனக்கு புரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.






