சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் முகமது சமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசுத்தினார். இதன் மூலம் ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை சமி பெற்றார்.
மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையும் சமிக்கு கிடைத்தது. இந்த சூழலில் முகமது சமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு தன்னுடைய சாதனையை பிளையிங் கிஸ் கொடுத்து கொண்டாடினார்.
முத்தம் கொடுத்து கொண்டாட்டம்:
இது பல்வேறு விவாதங்களை கிளப்பியது. சமி தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்த நிலையில், தற்போது தனியாக தான் வசித்து வருகிறார்.ஆனால் ஷமிக்கும் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளத்தில் வதந்திகள் கிளம்பின.
மேலும் இருவரும் சேர்ந்து இருப்பது போல் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படத்தையும் ரசிகர்கள் பதிவிட்டு இருந்தனர். இது அனைத்தும் பொய் என சமி ஏற்கனவே கூறியிருந்தார். இந்த சூழலில் சானியா மிர்சா தற்போது துபாயில் தான் வசித்து வருகிறார். இதனால் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டு சமி சானியா மிர்சாக்கு தான் முத்தம் கொடுத்தார் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஷமி கொடுத்த விளக்கம்:
இந்த நிலையில் தாம் ஏன் அவ்வாறு கொண்டாடினேன் என்பது குறித்து ஷமி தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் நான் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதை முத்தம் போட்டு கொண்டாடியது என்னுடைய தந்தைக்காக தான். அவர்தான் என்னுடைய ரோல் மாடல்.அவர் எப்போதுமே என் கூட இருக்கின்றார் என்று ஷமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க- 74 வருடம்.. 352 போட்டிகள்.. புது வரலாறு படைத்த கேரளா.. உதவிய ஹெல்மெட்.. முதல் முறையாக ரஞ்சி டிராபி பைனலுக்கு தகுதி
சமியின் இந்த விளக்கம் அவருக்கு எதிராக பரப்பப்பட்ட பொய்களுக்கு முட்டுக்கட்டையை போட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறந்த பில்டிங்கில் ஈடுபடும் வீரர்களுக்கு பதக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அப்போது பில்டிங் கோச் திலீப் பழக்கம் வழங்குவதற்கு முன்பு பேசிய சமி, இந்த விருது எனக்கு தான் கிடைக்கப் போகிறது. ஏனென்றால் நான் பிடித்த கேட்ச் மிகவும் அபாரமானது எனக் கூறி சிரித்தார். எனினும் இந்த விருதை விராட் கோலிக்கு பயிற்சியாளர் வழங்கினார்.






