நான் சொல்றது கஷ்டமா இருக்கலாம்.. ஆனா இந்திய அணி இரண்டாவது செஞ்சது ரொம்பவே தப்பு – தினேஷ் கார்த்திக் ஆதங்கம்

0
99

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி நாளை வங்கதேச அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணி தேர்வு குறித்த சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணித் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதி இந்திய அணியை அறிவித்தது. அந்த அணியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் பும்ரா காயம் அடைந்து இருந்தாலும் அவர் விரைவில் உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவர் அறிவிக்கப்பட்டார். மேலும் இந்திய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.

இருப்பினும் பும்ராவின் காயம் சரியாகாத நிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டது நல்ல முடிவாக பார்க்கப்பட்டாலும், தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக மாயாஜால சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டது சிறிது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே இந்திய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது ஐந்தாவது வீரராக திரும்பவும் ஒரு சுழற் பந்துவீச்சாளர் ஏன் என்று பலதரப்பட்ட கேள்விகள் எழுந்தது.

- Advertisement -

சொல்வது கடினமாக இருக்கலாம்

ஏற்கனவே இந்திய அணியில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சார் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இருக்கும்போது ஐந்தாவது சுழல் பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டது ஏன் என்று புரியவில்லை என இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். இந்திய அணியின் திட்டம் எதுவாக இருந்தாலும் ஒரு அணியில் ஐந்து சுழற் பந்துவீச்சாளர்களை சேர்ப்பது குழப்பமான முடிவை ஏற்படுத்துவதாக சில வெளிப்படையான கருத்துக்களை அவர் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க:இந்திய அணியின் 40 ஆண்டு கால சாதனை தகர்ப்பு.. ஒருநாள் கிரிக்கெட்டில் மெகா சாதனை படைத்த அமெரிக்கா.. ஓமனை வீழ்த்தியது

இது குறித்த தினேஷ் கார்த்திக் பேசும்போது “இந்திய அணியில் 5 சுழற் பந்துவீச்சாளர்கள் என்பது தனிப்பட்ட முறையில் நான் மிகவும் அதிகமாக உணர்கிறேன். அவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நான்கு சுழற் பந்து வீச்சாளர்களோடு இந்த தொடரில் விளையாடியிருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. அது குழப்பமாக இல்லாவிட்டாலும் இந்திய அணிக்குள் சிறிய குழப்பத்தை உண்டு பண்ணும் என்று எனக்கு தோன்றுகிறது. இது ஒரு வலுவான வார்த்தையாக தோன்றலாம், ஆனால் ஒரு அணியை அறிவித்துவிட்டு ஒரு தொடக்க வீரருக்கு பதிலாக மற்றொரு சுழற் பந்துவீச்சாளரை சேர்ப்பது சரியாக என்ன செய்வது என்று தெரியவில்லை” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -