சாம்பியன்ஸ் டிராபி.. அரையிறுதிக்கே பாகிஸ்தான் வரமாட்டாங்க.. இந்த 4 அணிகளுக்கு தான் வாய்ப்பு – ஜாகிர் கான் கருத்து

0
342

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் அணி வர வாய்ப்பு இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடர் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியனாக களமிறங்கும் பாகிஸ்தான் இந்த தொடரை நடத்துகிறது. இந்தியா விளையாடும் போட்டி மற்றும் முதல் அரையிறுதி ஆட்டம் மட்டும் ஹைபிரிட் மாடல் முறைப்படி துபாயில் நடத்தப்படும். ஒருவேளை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், துபாயில் பைனல் நடைபெறும்.

- Advertisement -

இல்லை என்றால் பாகிஸ்தான் ஃபைனலை நடத்தும். இந்த தருணத்தில் ஏ பிரிவில் இந்தியா நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கு பெறுகிறது. 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் மோதுகின்றன.

இந்த நிலையில் இந்த தொடரில் அரையிறுதி சுற்றுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி தகுதி பெறும்.இந்த நான்கு அணிகள் எது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் கான் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இதில் சந்தேகமே வேண்டாம். என்னை கேட்டால் இந்திய அணி அரையிறுதிக்கு கண்டிப்பாக வந்து விடும். அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி பலமாக இருக்கிறது. அவர்களும் அரையிறுதிக்கு வந்து விடுவார்கள். இது போன்ற தொடர்களில் நியூசிலாந்து அணி எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

நான்காவது அணியாக தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். வெள்ளி நிற கிரிக்கெட் பந்துகளில் தென்னாப்பிரிக்கா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இந்தத் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

ஏனென்றால் பாகிஸ்தான் அணி தற்போது சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதில்லை. வெள்ளை நீற கிரிக்கெட்டில் தொடர்ந்து அவர்கள் ஒரே மாதிரி விளையாடுவதில்லை. அவ்வப்போது  தடுமாறுகிறார்கள் என்று ஜாகிர் கான் கூறியுள்ளார்.

ஆனால் கடைசியாக பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை அவர்களது சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரில் வீழ்த்தி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் சயிம் அயூப் இல்லாதது பெரும் பின்னடைவாக பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -