இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் பொழுது தமக்கு ஆர் சி பி அணி விளையாடுவதை பார்ப்பது போலவே இருந்ததாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று இந்திய அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் எந்த பேட்ஸ்மேன் பொறுப்பு எடுத்து இறுதிவரை நின்று விளையாட முயற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி ஞாபகம்தான் வந்தது
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “நேற்று வாஷிங்டன் சுந்தர் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். பென் டக்கெட் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சரியான முறையில் பேட்டிங் செய்யவில்லை. அடுத்து சால்ட் வெளியேறினார் தொடர்ந்து லிவிங்ஸ்டன் வெளியேறினார். இதை பார்க்கும் பொழுது எனக்கு ஆர்சிபி ஞாபகம் தான் வந்தது”
“இதுகுறித்து இங்கிலாந்து வீரர்கள் வெட்கப்பட வேண்டும். முதல் போட்டியில் ஆட்டம் இழந்ததற்கு புகை மூட்டமாக இருந்ததை ஹாரி புரூக் காரணம் காட்டி இருந்தார். அது ஒரு ஷார்ட் பந்து, அதை தேவையில்லாமல் முன் காலில் ஆடி இரண்டாவது போட்டியிலும் அவர் ஆட்டம் இழந்தார். சென்னையில் பந்து தெளிவாகவே தெரிந்தது. ஆனால் அவரால் பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்தை கணிக்க முடியவில்லை”
இந்த மோசமானதை செய்தார்கள்
“பென் டக்கெட் தன் வாழ்க்கையில் முதல்முறையாக வாசிங்டன் சுந்தரை விளையாடியிருக்கலாம். இருந்த போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் அவர் எடுத்ததும் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடச் சென்று ஆட்டம் இழந்தார். இன்னொரு பக்கம் பில் சால்ட் அர்ஸ்தீப் சிங் பந்தை தேர்ட் மேனில் சுலபமாக விளையாடியிருக்கலாம். ஆனால் அவர் அதை டீப் ஸ்கொயர் லெக்குக்கு அடித்து ஆட்டம் இழந்தார்”
இதையும் படிங்க : திலக் வர்மாவை விட்றாதிங்க.. அவர் 3 ஃபார்மேட் சூப்பர் ஸ்டார் பிளேயர்.. காரணம் இருக்கு – அம்பதி ராயுடு பாராட்டு
“பட்லர் தனியாக போராடினார். அவரும் எவ்வளவு நேரம்தான் அதையே செய்து கொண்டிருக்க முடியும். அவர் விளையாடிய பந்தில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருந்தது. அதுவே அவர் ஆட்டம் இழந்ததற்கு காரணமாகவும் அமைந்தது. அப்படியே லிவிங்ஸ்டனுக்கும் நடந்தது. கூடுதல் பவுன்ஸ் இருந்த காரணத்தினால் அவரும் பட்லர் மாதிரியே ஆட்டம் இழந்து விட்டார்” என்று கூறி இருக்கிறார்.






